கவுன்சிலர்களின் கணவர்கள் வாதம்-அதிகாரி சஸ்பெண்ட்
கொடைக்கானல்: கொடைக்கானிலில் பஞ்சாயத்து யூனியன் கூட்டத்தில், பெண் கவுன்சிலர்களுக்கு பதில் அவர்களது கணவர்மார்களை கூட்டத்தில் கலந்து கொள்ள அனுமதித்த வட்டார வளர்ச்சி அலுவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
கொடைக்கானல் பஞ்சாயத்து யூனியனில் திமுகவைச் சேர்ந்த அப்துல் ரசாக் தலைவராகவும், கிருஷ்ணன் துணைத் தலைவராகவும் உள்ளனர்.
இதில், கிருஷ்ணவேணி (திமுக), ராமுத்தாய் (திமுக), அம்சவள்ளி (அதிமுக), சரஸ்வதி (காங்கிரஸ்) ஆகிய பெண் கவுன்சிலர்கள் உள்ளனர்.
யூனியன் கவுன்சில் கூட்டதில் தேர்வு செய்யப்பட்ட பெண் கவுன்சிலர்களுக்கு பதில் அவர்களது கணவர்களே பங்கு கொள்வது வழக்ககாக இருந்துள்ளது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் கூட்டம் நடைபெற்றுள்ளது. இதில், ராமுத்தாய்க்கு பதில் அவரது கணவர் சங்கிலியும், கிருஷ்ணவேணிக்கு பதில் அவரது கணவர் ஆறுமுகமும், சரஸ்வதிக்கு பதில் அவரது கணவர் அசோக் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அத்தோடு நில்லாமல், கூட்டத்தில் கலந்து கொண்ட பெண் கவுன்சிலர்களின் கணவர்கள் தங்களது மனைவியின் கையழுத்தையும் போட்டு ஜனநாயகத்தை சரமாரியாக தூக்கிப் போட்டு மிதித்துள்ளனர்.
பெண் கவுன்சிலர்களின் கணவர்மார்கள் கலந்து கொண்டு வாதிட்ட 'அழகு', கொடைக்கானலில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது குறித்து தகவல் அறிந்த திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் கிரிலோஸ் குமார் பெண் கவுன்சிலர்களுக்கு பதில் அவர்களது கணவர்களை அனுதித்த வட்டார அலுவலர் சலிம் சேட்டை அதிரடியாக சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
கொட்டைக்கானல் பஞ்சாயத்து யூனியனில் வரவேற்பு பலகை அமைப்பதில் பல லட்சம் முறைகேடு நடைபெற்றுள்ளதாக வந்த புகாரை அடுத்து அது குறித்து விசாரணை நடத்தவும் உத்தரவிட்டுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications