கூட்டணி, தொகுதி பங்கீடு- திமுக, அதிமுக குழுக்கள் அறிவிப்பு
சென்னை: கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்துப் பேச குழு ஒன்றை திமுக மற்றும் அதிமுக தொகுதிப் பங்கீட்டுக் குழுக்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
லோக்சபா தேர்தலுக்கு தமிழகக் கட்சிகள் தயாராகி வருகின்றன. முதல் கட்டமாக தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச ஒவ்வொரு கட்சியும் குழுக்களை அமைக்க ஆரம்பித்துள்ளன.
அதிமுக சார்பில் குழு ஒன்றை ஜெயலலிதா நேற்று அறிவித்தார்.
இதுதொடர்பாக ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கை:
விரைவில் நடைபெற உள்ள 2009 பாராளுமன்ற பொதுத் தேர்தலில் போட்டியிட, அ.தி.மு.க.வின் தலைமையிலான கூட்டணியில் இடம்பெறும் கூட்டணி கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகளை ஒதுக்குவது என்பது குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த தொகுதிப் பங்கீட்டுக்குழு அமைக்கப்படுகிறது என்பதையும் அதில் கீழ்க்கண்டவர்கள் இடம்பெறுகிறார்கள் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
அ.தி.மு.க. அவைத் தலைவர் இ.மதுசூதனன், பொருளாளர், எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் டி.ஜெயக்குமார், கொள்கை பரப்பு செயலாளர் மு.தம்பிதுரை என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.
ஸ்டாலின் தலைமையில் குழு
இதேபோல திமுகவும் ஒரு குழுவை அறிவித்துள்ளது. மு.க.ஸ்டாலின் தலைமையிலான அந்தக் குழுவில், ஆற்காடு வீராசாமி, துரைமுருகன், வீரபாண்டி ஆறுமுகம், பொன்முடி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
-
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
எல்லா பிரச்சனைக்கும் நான் காரணமா.. வாடகை பேச்சாளர்கள் இப்ப பேசுங்க.. வரிந்து கட்டிய லீமாரோஸ் -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி












Click it and Unblock the Notifications