பெங்களூர்- தமிழக இன்போசிஸ் கால்சென்டர் ஊழியர் கொலை
பெங்களூர்: பெங்களூர் கால் சென்டரில் வேலை பார்த்த ஈரோட்டைச் சேர்ந்த வாலிபர் கொள்ளை கும்பலால் வீடு புகுந்து அடித்து கொலை செய்யப்பட்டார்.
ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர் உமேஷ் கிருஷ்ணன் (27). பெங்களூரில் உள்ள இன்போசிஸ் நிறுவன கால் சென்டரில் வேலை பார்த்து வந்தார்.
சமீபத்தில் திருமணமான இவர் தனது மனைவி ஹனி மேரியுடன் (26) பானஸ்வாடி ராமசாமிபாளையத்தில் வசித்து வந்தார்.
இந்நிலையில் நேற்று அதிகாலை 4.00 மணிக்கு கொள்ளை கும்பல் அவர் வீட்டு கதவை தட்டியுள்ளது. கதவை திறந்த உமேஷ் கிருஷ்ணன் யார் என கேட்பதற்குள் அவரை அடித்து தாக்கி வீட்டுக்குள் தள்ளி கதவைப் பூட்டியுள்ளனர்.
அவரையும் அவரது மனைவி மேரியையும் கட்டையால் அடித்து, உதைத்து கட்டிப் போட்டுள்ளனர். இருவரின் வாய் மற்றும் மூக்கை செல்லோ டேப மூலம் ஒட்டினர்.
பின்னர் வீட்டிலிருந்த பொருட்களை கொள்ளை அடித்துள்ளனர். மேரியின் தங்கத்தாலி உட்பட 3 மோதிரம், ஒரு தங்க சங்கிலி மற்றும் ரூ 3,500 ஆகியவற்றை எடுத்து கொண்டு தலைமறைவாயினர்.
அவர்கள் போன பின் நீண்டநேர போராட்டத்துக்கு பின் மேரி தனது கயிறுகளை அவிழ்த்துள்ளார். தனது கணவனின் கட்டுகளையும் அவிழ்த்துவிட்டுள்ளார். ஆனால், உமேஷ் கிருஷ்ணனிடம் எந்த அசைவும் இல்லை. அவர் பேச்சு மூச்சு இல்லாமல் இருப்பதை அறிந்த மேரி அருகிலிருந்தவர்களின் உதவியுடன் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.
ஆனால், வழியிலே உமேஷ் கிருஷ்ணனின் உயிர் பிரிந்தது. செல்லோடேப்பால் மூக்கு, வாய் ஆகியவை ஒட்டப்பட்டதால் அவர் மூச்சுத்திணறி இறந்துள்ளார்.
சமீபத்தில் உமேஷ் கிருஷ்ணன் வீட்டுக்கு பீரோ, கட்டில் போன்றவற்றை வாங்கியுள்ளார். அதை வீட்டுக்கு வைக்க வந்த வேலையாட்கள் கொள்ளை கும்பலுக்கு துப்பு கொடுத்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.
-
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு












Click it and Unblock the Notifications