'வன்னிய பெரும்வழுதி': ஜெகத் வாழ்த்து-நடராஜன் தாக்கு
சென்னை: வன்னியர்களின் சொத்துக்களைப் பாதுகாத்து அவற்றை முறைப்படுத்தும் வகையில் நல வாரியத்தை அறிவித்துள்ள முதல்வர் கருணாநிதி ஒரு வன்னியப் பெருவழுதி என்று ஜனநாயக முன்னேற்றக் கழக நிறுவனரும், வீர வன்னியர் பேரவைத் தலைவருமான ஜெகத்ரட்சகன் வாழ்த்தியுள்ளார்.
இதுகுறித்து ஜெகத்ரட்சன் விடுத்துள்ள அறிக்கை:
எங்கள் வன்னியப் பெருவள்ளல்கள் வன்னியர் வாழ்வு மேம்பாடு அடைய கொடையாக தந்த சொத்துகள் யாவும், பாறையிலே விதைத்த பயிராய், கானகத்து நிலவாய், கடலில் விழும் மழையாய்' தான் இதுவரை இருக்கக் கண்டோம்.
எங்கோ இருக்கிறது எங்கள் சொத்துகள். அவற்றை எங்கே காண்பது? என்ற ஏக்கத்தோடு இருந்த எங்கள் வயிற்றில் பால் வார்த்தது போல் வன்னியர் சொத்துகள் நலவாரியம்' அமைத்து தந்த முதல்-அமைச்சர் கருணாநிதியை வன்னியப் பெரும்வழுதி என்றே வாழ்த்தி வணங்குகிறோம்.
பி.டி.செங்கல்வராயர் நாயகர் தன் திரண்டச் சொத்துக்களையெல்லாம் அறக்கட்டளையாக்கி வன்னிய மக்கள் கல்விக்காக' என உயில் எழுதி வைத்தார். எங்கள் சொத்துகள் சிலரின் ஆசை அலைகடலால் கொள்ளப்பட்டது என்பதாகச் சொல்லி நியாயம் கேட்டோம். நியாயம் கிடைத்தும் அதை நிறைவேற்றுவதிலே பல சங்கடங்கள்.
கோடிக்கணக்கானச் சொத்துகளை, தனக்கு பின் தன் தாயும், மனைவியும் நிர்வகித்து, பின் அவை அனைத்தும் என் வன்னிய மக்களுக்கே என்று எழுதிவைத்துச் சென்றார் கந்தசாமிக்கண்டர். அவை அவர் உயிலில் கண்டபடி உவப்பைத் தரவில்லை. கசப்பையே கண்டோம்.
தனக்கு பிறகு சொத்துகள் யாவும் வன்னிய மக்கள் வாழ்வில் வளம் காண அறக்கட்டளை அமைத்து வைகுண்டம் சென்ற ஆளவந்தார் நாயகரின் எண்ணம் முழுமையாக ஈடேறவில்லை.
கோபால் நாயகர் சேர்த்து வைத்த சொத்துகள் எங்கே என்பதே தெரியவில்லை. இப்படி மவுலிவாக்கம் சோமசுந்தர நாயகர், எட்டியப்ப நாயகர் என எண்ணற்ற பெரியவர்கள் கண்ட கல்விக் கூடங்கள், கணக்கில்லாச் சொத்துகள் எல்லாம் எங்கே?
இதுபோலவே நாடுதோறும் நகரங்களிலும் வன்னியர் சங்கம், வன்னியர் வளர்ச்சிக் கழகம், வன்னியர் மேம்பாட்டுக் கூடம், வன்னியர் பெருமன்றம் என பல்வேறு பெயர்களில் அமைந்த சொத்துகள், திருமண மண்டபங்கள், கட்டிடங்கள், தோட்டங்கள் எல்லாம் எங்கே? எவரிடத்தில்? தெரியவில்லை.
கடல் கொண்டு போனதா? வெந்தனலில் வெந்து போனதா? நொந்துபோன உள்ளத்தோடு வன்னியர்கள் கேட்டுக் கொண்டே இருந்தார்கள்.
2000-ம் முதல் வீரவன்னியர் பேரவை தொடங்கிய நாள்தொட்டு முதல்-அமைச்சரிடமும், தமிழக அரசிடமும் இந்த சொத்துகளின் இன்றைய மதிப்பு ரூ.20 ஆயிரம் கோடிக்கு மேல் இருக்க வேண்டும், இவைகளை மீட்டு எங்கள் வன்னிய மக்களுக்கு அவை பயன்படும்படி செய்திட வன்னியர் சொத்துகள் நல வாரியம்' அமைத்திட வேண்டுமென கோரிக்கை வைத்தோம்.
9 ஆண்டுகளுக்கு பிறகு எங்களின் அந்த கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. சென்றமுறை முதல்-அமைச்சராக பொறுப்பேற்றபோது இதுபோன்ற ஒரு வாரியத்தை அமைத்து ஆணையிட்டீர்கள். ஆனால், அதை பிறகு வந்தவர்கள் செயல்படாமல் நிறுத்திவிட்டனர். 5-வது முறையாக மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் நாங்கள் நேரிலே மனுகொடுத்தோம். அதை மறவாமல் நினைவு கூர்ந்து நிறைவேற்றித் தந்துள்ளீர்கள்.
வன்னியர் சொத்துகள் நல வாரியம் அமைத்து ஆணையிட்டுள்ளீர்கள். இதற்காக எங்கள் நெஞ்சம் நிறைந்த நன்றியை தங்களுக்கு காணிக்கையாக்குகிறோம். வளமான வாழ்வு தன்னை வன்னியர்கள் பெறுவதற்கு ஒரு வாய்ப்பாக இந்த வன்னியர் சொத்துகள் நல வாரியம் தந்த வளவனே'' உங்களை வன்னியப் பெரும்வழுதி' என்றே எங்களில் ஒருவராக்கி வணங்குகிறோம்.
வாரியம் அமைத்திட உறுதுணையாக இருந்த உள்ளாட்சித்துறை அமைச்சர் ஸ்டாலினுக்கும் நன்றியை காணிக்கையாக்குகிறோம் என்று கூறியுள்ளார் ஜெகத்ரட்சகன்.
ஏமாற மாட்டோம் - ஏ.கே.நடராஜன்
இதற்கிடைய, வன்னியர் சங்கத் தலைவர் ஏ.கே.நடராஜன் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், இது வெறும் பத்திரிகை செய்தி தான், அரசாணை அல்ல. நாடாளுமன்றத் தேர்தலை மனதில் வைத்து வெளியிடப்பட்டுள்ளது. வன்னியர்களை ஏமாற்றவும் முடியாது, ஏமாறவும் மாட்டார்கள் என்று தெரிவித்துள்ளார்.
-
தமிழ்நாட்டில் வெப்பநிலை அடியோடு குறையப்போகுது.. வானிலை மையம் குட்நியூஸ் -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
கூட்டுறவு வங்கிகள் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி குட் நியூஸ்? உங்க கடன் ரத்தாகுமா? கட்சிகள் மாஸ் பிளான் -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு!












Click it and Unblock the Notifications