ஏப்ரல் 9-காரைக்கால் அம்மையார் கோவில் கும்பாபிஷேகம்
காரைக்கால்: காரைக்கால் அம்மையார் கோவில் கும்பாபிஷேகம் வரும் ஏப்ரல் 9ம் தேதி நடைபெறுகிறது.
காரைக்கால் அம்மையார் திருக்கோவில் கும்பாபிஷேகத்தை நடத்துவது குறித்த கூட்டத்தில் புதுவை எதிர்கட்சித் தலைவர் நாஜிம் கலந்து கொண்டார்.
அவருடன் கூட்டத்தில் திருப்பணிக்குழு தலைவர் மகாவீர்சந்த், உறுப்பினர் பாலகிருஷ்ணன், சாந்தகுமார், இளங்கோவன், காரைக்கால் நகரமன்ற தலைவி பிரபாவதி, நகர்மன்ற உறுப்பினர்கள் ராணிகண்ணன், சந்திரா சிவராஜன், அன்புரோஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்துக்கு பின்னர் நாஜிம் வெளியிட்ட அறிக்கையில்,
காரைக்கால் அம்மையார் கோவிலில் 2008ம் ஆண்டு செப்டம்பர் மாதம் திருப்பணி வேலைகள் தொடங்கப்பட்டது. பங்குனி மாதத்திற்குள் கும்பாபிஷேகத்தை நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டதன்பேரில் கோவில் தனி அதிகாரி ஆசைத்தம்பி மற்றும் திருப்பணிக்குழுவினர் திருப்பணி வேலைகளை விரைந்து செயல்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் அடுத்த மாதம் ஏப்ரல் 9-ந் தேதி கும்பாபிஷேகம் செய்ய தேதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இம்மாதம் 13-ந் தேதியன்று காலை 10 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் பந்தக்கால் முகூர்த்தம் நடைபெறுகிறது.
காரைக்கால் அம்மையார் கோவிலுக்கு கும்பாபிஷேகம் செய்யப்படும்போது சோமநாயகி சமேத சோமநாதர் கோவிலுக்கும், அங்குள்ள பரிவார தெய்வங்களுக்கும் மற்றும் அருகில் இருக்கும் அய்யனார் கோவிலுக்கும் சேர்த்து கும்பாபிஷேகம் நடைபெறும் என்று கூறியுள்ளார் நாஜிம்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications