வன்னியர் நல வாரிய செய்தியத் தடுத்தார் நரேஷ் குப்தா - கருணாநிதி
சென்னை: வன்னியர் பொது சொத்து நல வாரியம் அமைப்பது குறித்த செய்தி வரக் கூடாது என்று பத்திரிகை அலுவலகங்களுக்கு தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா போனில் பேசித் தடுக்கப் பார்த்தார் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,
2.3.2009 அன்று மதியம் 3.30 மணியளவில்தான் மத்திய தேர்தல் ஆணையர் நாடாளு மன்ற பொதுத் தேர்தல் நடைபெறும் தேதியை அறிவிக்கின்றார். அதற்கு பிறகு தான் தேர்தல் கட்டுப்பாடுகள் எல்லாம் நடைமுறைக்கு வருகின்றன.
ஆனால் 2 ஆம் தேதிக்கு முன்பு பிப்ரவரி 28 ஆம் தேதியோ, மார்ச் முதல் தேதியோ ஏன் 2 ஆம் தேதி காலையிலோ தமிழக அரசின் சார்பில் அறிவிக்கப்பட்ட சில திட்டங்கள் ஏடுகளில் வெளியே வரலாமா கூடாதா?
உதாரணமாக வன்னியர் பொது சொத்து நல வாரியம் என்ற ஒரு அமைப்பு ஏற்படுத்தப்பட்டு அதற்கான அதிகாரி நியமனம் செய்யப்பட்டதற்கான அறிவிப்பு ஏடுகளுக்கு 2.3.2009 அன்று தரப்பட்டுள்ளது.
ஆனால் தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி சில பத்திரிகையாளர்களுடன் தொலைபேசியில் பேசி அந்தச் செய்தியினை ஏடுகளிலே வெளியிடக் கூடாது என்று தடுத்திருக்கிறார் என்றால் அவருக்கு இதிலே ஏன் இப்படிப்பட்ட அக்கறை?
தேர்தல் ஆணையமும், தேர்தல் அதிகாரிகளும் செய்கின்ற செயல்கள் பற்றி யாரும் கேள்வி கேட்கக் கூடாது என்ற போதிலும் இப்படியெல்லாம் செயல்கள் நடைபெறுகின்றன என்று மக்களுக்குத் தெரிவிக்கக் கூட கூடாதா என்ன? என்று கூறியுள்ளார் கருணாநிதி.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications