பாஜக 14 இடங்களில் போட்டியிட முடிவு - தென் சென்னையில் இல.கணேசன்
சென்னை: லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் 14 தொகுதிகள் வரை பாஜக தனித்துப் போட்டியிடும் எனத் தெரிகிறது.
தமிழகத்தில் பாஜக கட்சி இதுவரை எந்தக் கூட்டணியிலும் இடம் பெறவில்லை. மார்ச் 12ம் தேதி வரை காத்திருப்போம், அதற்குள் யாராவது கூட்டணிக்கு வந்தால் சேர்த்துக் கொள்வோம் என இல.கணேசன் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் கூட்டணியே ஏற்படாவிட்டால் தனித்துப் போட்டியிட பாஜக திட்டமிட்டுள்ளது. அப்படி போட்டியிட்டால் எத்தனை தொகுதிகளில் போட்டியிடலாம் என உத்தேசமாக தீர்மானித்து வைத்துள்ளனர்.
9 முதல் 14 தொகுதிகள் வரை பாஜக போட்டியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தென்சென்னையில் இல.கணேசன்
மாநில தலைவர் இல.கணேசனும் தேர்தல் களத்தில் குதிக்கிறார். அவர் அனேகமாக தென் சென்னையில் போட்டியிடக் கூடும் எனத் தெரிகிறது. கட்சியின் பொதுச் செயலாளரான தமிழிசை செளந்தரராஜன் வட சென்னையில் போட்டியிடக் கூடும் எனத் தெரிகிறது.
கன்னியாகுமரி (முன்பு நாகர்கோவில்) தொகுதியில், பொன்.ராதாகிருஷ்ணன் மீண்டும் போட்டியிடுவார்.
கோவையில் சி.பி.ராதாகிருஷ்ணன், சிவகங்கையில் எச்.ராஜா, ஸ்ரீபெரும்புதூரில் குமாரவேலு ஆகியோர் போட்டியிடலாம்.
லலிதா குமாரமங்கலம்
திருச்சி தொகுதியில் லலிதா குமாரமங்கலம் போட்டியிடக் கூடும். அதேசமயம், சுகுமாரன் நம்பியாரும் இத்தொகுதிக்கு முயல்வதாக தெரிகிறது. இவர் முன்பு வட சென்னை தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர் என்பது நினைவிருக்கலாம்.
இப்படி மொத்தம் 14 தொகுதிகள் வரை பாஜக போட்டியிடக் கூடும் எனத் தெரிகிறது.
கூட்டணிக்கு பாஜக விதித்துள்ள கெடுவான 12ம் தேதியன்று இந்த பட்டியலை பாஜக தலைமை முறைப்படி வெளியிடத் திட்டமிட்டுள்ளது.
-
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக











Click it and Unblock the Notifications