தப்ப முயன்ற கைதிகள்-வேனுக்குள் சுட்ட போலீஸ்
விருதுநகர்: மதுரை மத்திய சிறையிலிருந்து சிவகாசி கோர்ட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்ட கைதிகள் திடீரென தப்ப முயன்றனர். இதையடுத்து போலீஸார் வேனுக்குள் துப்பாக்கிச் சூடு நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக 11 கைதிகள் மீது போலீஸார் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
மதுரை மத்திய சிறையிலிருந்து கைதிகள் கணேசன் (42), எலும்பன் என்கிற கருப்பசாமி (24), மாரிக்காளை (26), தங்கப் பாண்டி (26), காளிதாஸ்(28), முருகன் (29), சடையாண்டி (27), பொன்ராஜ் (25), ரமேஷ் குமார் (23), விஜயன் (29), கருத்தப்பாண்டி (26) ஆகிய 11 பேரை சிவகாசி கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக ஒரு வேனில் போலீஸார் அழைத்துச் சென்றனர்.
சப் இன்ஸ்பெக்டர் பொன்னுச்சாமி தலைமையில் 6 போலீஸார் வேனில் சென்றனர். கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் மீண்டும் மதுரைக்கு வேனில் கொண்டு வந்து கொண்டிருந்தனர்.
அப்போது சில கைதிகள் போலீசாரிடம் குடிப்பதற்கு தண்ணீர் கேட்டனர். உடனே போலீசார் அவர்களிடம் விருதுநகர் வந்ததும் வாங்கி தருகிறோம் என்று கூறினர். அப்போது கைதி ரமேஷ்குமார் வேனுக்குள் சிகரெட் பற்ற வைத்தார். இதனை போலீசார் கண்டித்தனர். இதனால் போலீசாருக்கும், கைதிகளுக்கும் வேனுக்குள் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
வேன் விருதுநகர்- மதுரை பை-பாஸ் சாலையில் உள்ள வடமலைக்குறிச்சி அருகே வந்தபோது மீண்டும் கைதிகளுக்கும், போலீசாருக்கும் வாக்குவாதம் எழுந்தது. அப்போது கைதிகள் எழுந்து கூச்சல் போட்டனர். கைதிகளை அமர வைக்க போலீசார் போராடினர்.
இந்த நிலையில் கைதி ரமேஷ் குமார் தப்பிக்க முயன்றார். நிலைமை விபரீமாவதை உணர்ந்த சப் இன்ஸ்பெக்டர் மாரி தனது துப்பாக்கியால் வேனின் கூரை மீது சுட்டார். இதையடுத்து கூரை பிய்த்துக் கொண்டு குண்டு வெளியே பாய்ந்தது.
இதைப் பார்த்து பயந்து போன கைதிகள், கப் சிப் என்று அமர்ந்து விட்டனர்.
பின்னர் விருதுநகர் வந்ததும் மேற்கு காவல் நிலையத்திற்கு வேன் திருப்பப்பட்டது. அங்கு போலீஸார் புகார் பதிவு செய்தனர். அதில், 11 கைதிகளும் தங்களைத் தாக்கி தப்ப முயன்றதாக கூறினர். இதையடுத்து 11 பேர் மீதும் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
-
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications