கொளத்தூர் மணி ஜாமீன் மனு தள்ளுபடி
Subscribe to Oneindia Tamil
திண்டுக்கல்: பெரியார் திராவிடர் கழக தலைவர் கொளத்தூர் மணியின் ஜாமின் மனுவை திண்டுக்கல் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
திண்டுக்கல்லில் நடந்த பொதுக் கூட்டம் ஒன்றில் பெரியார் திராவிடர் கழக தலைவர் கொளத்தூர் மணி விடுதலை புலிகளுக்கு ஆதரவாகவும், இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் பேசியதாக குற்றம்சாட்டப்பட்டு, கைது செய்யப்பட்டார்
தற்போது அவர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் கொளத்தூர் மணிக்கு ஜாமீன் கேட்டு, அவரது வக்கீல் கணேசன் திண்டுக்கல் இரண்டாவது மாஜிஸ்திரேட்டு நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு மாஜிஸ்திரேட் ராதாகிருஷ்ணன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மாஜிஸ்திரேட் கொளத்தூர் மணியின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications