டீ கடையில் டீ குடித்த தலித் முதியவருக்கு அடி உதை!
திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே டீ கடையில் அமர்ந்து டீ குடித்த தலித் முதியவருக்கு அடி உதை விழுந்தது.
திண்டுக்கல் மாவட்டம், பழனி பாலசமுத்திரம் அருகேயுள்ள உள்ளது குரும்பபட்டி. இந்த கிராமத்தில் உள்ள ஒரு டீ கடையில் தலித் சமூகத்தைச் சேர்ந்த கிட்டான்(50) என்ற முதியவருக்கு டீ குடித்துக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த மாரிமுத்து, குமரேசன் ஆகியோர் முதியவரைப் பார்த்து, அவரை இழிவாக திட்டியதோடு அடித்து உதைத்தனர். இதில் கிட்டான் படுகாயம் அடைந்தனர்.
இந்த சம்பவம் குறித்து கிட்டான் பழனி தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளி்த்தார். ஆனால் அந்த புகாரின் பேரில் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் அந்த கிராமத்தைச் சேர்ந்த மக்கள் பொது மக்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட முயன்றனர்.
கிட்டான் புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதியளித்தை தொடர்ந்து பொது மக்கள் கலைந்து சென்றனர்.












Click it and Unblock the Notifications