மதிமுகவிலிருந்து விலக மு.கண்ணப்பன் முடிவு?
பொள்ளாச்சி: மதிமுக அவைத் தலைவர் மு.கண்ணப்பன் அக்கட்சியிலிருந்து விலகப் போவதாக செய்திகள் பரவியுள்ளன. இதுகுறித்து அவர் கருத்து தெரிவிக்க மறுத்து விட்டார்.
திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவராக விளங்கியவர் கண்ணப்பன். வைகோ, திமுகவிலிருந்து வெளியேற்றப்பட்டு மதிமுகவைத் தொடங்கியபோது அவருடன் இணைந்தார்.
கட்சியின் பல்வேறு முக்கியப் பொறுப்புகளை வகித்து வந்தார். எல்.கணேசன் கட்சியிலிருந்து வெளியேறியதும், அவர் வகித்து வந்த அவைத் தலைவர் பொறுப்பு, கண்ணப்பனிடம் வந்தது.
சட்டசபை மதிமுக தலைவராகவும் செயல்பட்டு வருகிறார் கண்ணப்பன். கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் தொகுதி எம்.எல்.ஏவாக இருக்கிறார்.
இந்த நிலையில், மதிமுகவிலிருந்து கண்ணப்பன் விலகப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
சமீபத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முதல்வர் கருணாநிதியை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் கண்ணப்பன். ஆனால் தான் போவது குறித்து அவர் வைகோவிடம் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் வைகோ அதிருப்தி அடைந்துள்ளார்.
இதன் காரணமாக கண்ணப்பனை அவர் ஓரம் கட்டி வருவதாக கூறப்படுகிறது. இதனால் அதிருப்தி அடைந்த கண்ணப்பன் சமீப காலமாக கட்சி விவகாரங்களில் ஈடுபடாமல் அமைதியாக இருந்து வருகிறார்.
மேலும், தனது ஆலோசகர்களுடன் தீவிர ஆலோசனையிலும் அவர் ஈடுபட்டு வருகிறார். எனவே அவர் மதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணையக் கூடும் என தகவல்கள் கூறுகின்றன.
இதுகுறித்து கண்ணப்பன் கருத்து தெரிவித்த மறுத்து விட்டார். தொடர்ந்து தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
ஏற்கனவே மதிமுகவிலிருந்து வெளியேற்றப்பட்ட எல்.கணேசனும், செஞ்சி ராமச்சந்திரனும் திமுகவில் தங்களை இணைத்துக் கொள்ளவுள்ளனர். அந்த சமயத்தில் கண்ணப்பனும் அவர்களுடன் இணைந்து திமுகவில் சேரலாம் எனவும் பரபரப்பாக எதிர்பார்க்கப்படுகிறது.
-
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
ஸ்டாலினுக்கு அதிர்ச்சி கொடுத்த கருணாநிதி! திநகர் மாஜி எம்எல்ஏவை தட்டி தூக்கிய தவெக! -
“மின்வாரிய பதவி உயர்வு விவகாரத்தில் பொய்.. தவெக அரசின் பித்தலாட்டம்”.. பாய்ந்து வந்த திமுக! -
“கொளத்தூரை இழந்தது போல மொத்தத்தையும் இழக்கப்போவது உறுதி”.. ஸ்டாலினை குறி வைத்து தாக்கிய தவெக! -
ஸ்டாலின் அதிரடி மாற்றம்.. இனி இவங்க யாருமே வேண்டாம்.. கொத்தாக தூக்கப்படும் பெரிய மீன்கள்! -
திமுகவில் இணைந்தார் Ex. MLA பனையூர் பாபு.. விசிகவில் இருந்து ஆயிரக்கணக்கானோருடன் ஜம்ப்! -
திமுக சொல்வது பொய்.. தலைமையிடம் சொல்லிவிட்டு தான் தவெகவுடன் சேர்ந்தோம் - உடைத்து பேசிய ப சிதம்பரம் -
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
யார் எம்எல்ஏ, யார் அமைச்சர் என்று முதல்வருக்கே தெரியாத ஆட்சி நடக்கிறது.. உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்! -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால் -
"நாளைக்கு வரோம்.. களத்தை அதிர வைக்கிறோம்!" டெல்லியை மிரள வைக்க கிளம்பிய கரப்பான் பூச்சி கட்சி! -
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்?












Click it and Unblock the Notifications