ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட தயார் - திருநாவுக்கரசர்
நாகர்கோவில்: கட்சி மேலிடம் அனுமதித்தால் ராமநாதபுரம் லோக்சபா தொகுதியில் போட்டியிட தயாராகவே இருக்கிறேன் என்று பாஜக தேசிய செயலாளரும், ராஜ்யசபா எம்.பியுமான திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.
நாகர்கோவில் வந்த திருநாவுக்கரசர் அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில்,
கடந்த 5 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியில் விலைவாசி உயர்வு, தீவிரவாதம், பணவீக்கம், வேலை இல்லா திண்டாட்டம், தொழில் மற்றும் உற்பத்தி குறைவு போன்ற சீரற்ற நிலைதான் நாட்டில் ஏற்பட்டு இருக்கிறது. விவசாயம் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது.
மத்திய அரசின் மீது மக்கள் வெறுப்பில் உள்ளனர். நாடு முழுவதும் காங்கிரஸ் அரசுக்கு எதிரான அலை வீசுகிறது. மாநில கட்சிகள் கூட மிகப்பெரிய மாற்றத்தை சந்திக்கும்.
கடந்த 5 ஆண்டுகளில் நடந்த இடைத்தேர்தலில் பல மாநிலங்களில் பா.ஜ. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்றுள்ளன. சில இடங்களில் காங்கிரசிடமிருந்து ஆட்சியை பா.ஜ. கைப்பற்றி இருக்கிறது. பா.ஜ. மீது மக்கள் மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் என்பதையே இது காட்டுகிறது.
ரஜினியை வற்புறுத்த முடியாது..
இந்தத் தேர்தலில் நடிகர் ரஜினியின் ஆதரவு யாருக்கு என்பது குறித்து அவர்தான் முடிவு செய்ய வேண்டும். அவரை யாரும் வற்புறுத்த முடியாது. ஆன்மிகம் மற்றும் தேசிய அரசியலில் அவருக்கு அதிக ஆர்வம் உண்டு.
இலங்கை தமிழர் பிரச்னைக்காக ஜெயலலிதா உண்ணாவிரதம் இருப்பதை பா.ஜ. வரவேற்கிறது. மக்களவை தேர்தலில் கட்சி அனுமதித்தால் ராமநாதபுரத்தில் போட்டியிடுவேன் என்றார் திருநாவுக்கரசர்.
-
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான்












Click it and Unblock the Notifications