உயர்நீதிமன்றத்துக்கு மீண்டும் பலத்த போலீஸ் பாதுகாப்பு
சென்னை: சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் மாலா கேட்டுக் கொண்டதன் பேரில் உயர்நீதிமன்றத்திற்கு மீண்டும் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி 19ம் தேதி வக்கீல்களுக்கும், போலீஸாருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் பெரும் வன்முறையாக மாறியது. இரு தரப்பினரும் கடுமையாக மோதிக் கொண்ட நிகழ்ச்சி நாட்டையே உலுக்கி விட்டது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து உயர்நீதிமன்றத்துக்குள் போலீஸார் வர உயர்நீதிமன்றம் தடை விதித்தது. கோர்ட்டுக்கு வெளியிலிருந்தபடி அவர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் உயர்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக ஹேமந்த் லட்சுமண் கோகலே நாளை பதவியேற்கவுள்ளார்.
இதைத் தொடர்ந்து உயர்நீதிமன்றப் பதிவாளர் மாலா, தமிழக அரசுக்கு கடிதம் ஒன்றை அனுப்பினார். அதில், மோதல் சம்பவத்திற்கு முன்பு கொடுக்கப்பட்டிருந்ததைப் போன்ற போலீஸ் பாதுகாப்பை மீண்டும் அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.
இதனை ஏற்று உடனடியாக போலீஸ் பாதுகாப்பு வழங்க தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி இன்று முதல் மீண்டும் உயர்நீதிமன்ற வளாகத்திற்குள் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
உயர்நீதிமன்றத்தின் நான்கு முக்கிய வாசல்களிலும் போலீஸார் நிறுத்தப்படுவர்.
மேலும், உயர்நீதிமன்றத்திற்குள் இதுவரை இயங்கி வந்த காவல் நிலையம் வெளியே போகிறது. தீவைத்து எரிக்கப்பட்டு விட்டதால் இந்தக் காவல் நிலையம் தற்காலிகமாக எஸ்பிளனேடு காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. விரைவில் தனி இடம் பார்த்து அங்கு உயர்நீதிமன்றக் காவல் நிலையம் இடம் பெயரவுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு












Click it and Unblock the Notifications