ஊட்டி மலையில் வேன் கவிழ்ந்து 2 பேர் பலி!
ஊட்டி: நிச்சயதார்த்த கோஷ்டி சென்று கொண்டிருந்த வேன் ஒன்று ஊட்டி மலைப் பாதையில் கவிழ்ந்து விழுந்தது. அதில் 2 பேர் பரிதாபமாக பலியானார்கள்.
நீலகிரி மாவட்டம், ஊட்டி அருகே உள்ள காந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் குமார். இவர் தனது மகளுக்கு கொடுமுடியில் உள்ள தனது உறவினர் மகனுக்கு நிச்சயதார்த்தம் செய்ய தனது உறவினர்கள் 50 பேருடன் இரண்டு வாகனங்களில் கொடுமுடி புறப்பட்டார்.
இந்நிலையில் வேன் மேட்டுப்பாளையம் அடுத்த கல்லாறு பாலம் அருகே சென்ற போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக சென்றது. வலதுபுறம் இருந்த 50 அடி பள்ளத்தில் உருண்டது. வேனில் பயணம் செய்தவர்களில் பலர் படுகாயம் அடைந்தனர்.
தகவல் அறிந்த போலீசார் மற்றும் தீயணைப்புப்படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வேனில் சிக்கிய 31 பேரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் மருத்துவமனை செல்லும் வழியிலேயே குப்புச்சாமி(55), பார்வதி(46) ஆகிய இருவர் பரிதாபமாக பலியானார்கள். மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் மூன்று பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பது தெரியவந்துள்ளது. இது குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
நிச்சயதார்த்தம் செய்ய சென்றவர்கள் விபத்தில் பலியானதை அடுத்து இரு வீட்டாரும் சோகத்தில் முழ்கியுள்ளனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications