பெண் போலீஸை கற்பழித்த எஸ்ஐ மீது வழக்கு
தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே பெண் போலீஸ்காரரை காவல் உதவி ஆய்வாளர் ஒருவரே பாலியல் பலாத்தாகரம் செய்தது பலரையும் அதிர்ச்சியில் உறையவைத்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் காலனி தெருவைச் சேர்ந்தவர் செல்வி. இவர் தமிழ்நாடு சிறப்புக் காவல் படையில் காவலாரக பணியாற்றி வருகின்றார்.
தாழையூத்து காவல் நிலையத்தில் எஸ்ஐ-யாக பணியாற்றி வருபவர் செந்தில்குமார். இவர்கள் மண்டைக்காடு கோயில் திருவிழா பாதுகாப்புக்கு சென்றனர். அப்போது இருவருக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் கடந்த டிசம்பர் 14 -ம் தேதி செல்வியை திருமணம் செய்து கொள்வதாக கூறி, எஸ்ஐ செந்தில்குமார் திருச்செந்தூர் அழைத்துச் சென்றுள்ளார்.
அங்கு ஹோட்டல் ஒன்றில் வைத்து திருமணத்திற்கு முன்பே செல்வியை எஸ்ஐ செந்தில்குமார் பலாத்காரம் செய்து விட்டாராம். மேலும், ஹோட்டலிலேயே செல்வியை விட்டுவிட்டு சென்று விட்டதாகவும் கூறப்படுகின்றது.
இந்ச சம்பவம் குறித்து செல்வி தூத்துக்குடி டிஎஸ்பி தீபக்குமாரிடம் புகார் செய்தார்.
டிஸ்பி உத்தரவின் பேரில் தூத்துக்குடி குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி எஸ்ஐ செந்தில்குமார் மீது பாலியல் பலாத்காரம் உள்பட 4 பரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.
தற்போது செந்தில்குமார் தலைமறைவாகி விட்டார்.












Click it and Unblock the Notifications