எஸ்டிடி, உள்ளூர் அழைப்புக் கட்டணங்கள் மேலும் குறையும்!

அதன்படி அனைத்து விதமான அழைப்புகளுக்கும் தொலைபேசி சேவை அளிக்கும் நிறுவனம் செலுத்த வேண்டிய டெர்மினேஷன் கட்டணத்தைக் குறைத்துள்ளது ட்ராய். இதனால் இனி லேண்ட்லைன், செல்போன் மற்றும் வில்போன் உள்ளிட்ட அனைத்து வகை போன்களுக்கும் எஸ்டிடி உள்ளிட்ட உள்நாட்டு அழைப்புக் கட்டணங்கள் கணிசமாகக் குறையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
அது என்ன டெர்மினேஷன் கால்?:
குறிப்பிட்ட ஒரு நிறுவன மொபைலிலிருந்தோ அல்லது லேண்ட்லைனிலிருந்து வேறு ஒரு நிறுவன மொபைலுக்கு ஒரு கால் செய்தால், அதற்கு குறிப்பிட்ட அளவு கட்டணத்தை செலுத்த வேண்டும். இதை உங்கள் சார்பாக செலுத்துபவர் உங்களுக்கு இணைப்பு தரும் தொலைபேசி நிறுவனம்தான். ஒரு அழைப்புக்கான கட்டணத்தில் 30 சதவிகிதம் டெர்மினேஷன் கட்டணம்தான். இது ஒருவித மறைமுகக் கட்டணம். நுகர்வோருக்குத் தெரியாத ஒன்றும் கூட.
இந்தக் கட்டணத்தைத்தான் ட்ராய் குறைத்துள்ளது.
ட்ராய் இப்படியொரு அறிவிப்பை வெளியிட்டுவிட்டதால் உடனே அனைத்து செல்போன்/லேண்ட் லைன் ஆபரேட்டர்களும் கட்டணத்தைக் குறைத்துவிடுவார்கள் என எதிர்பார்க்க முடியாது. அது சட்டப்பூர்வமானதும் அல்ல.
'சட்டப்படி கட்டாயமில்லைதான். ஆனால் நியாயப்படி பார்த்தால் இந்த டெர்மினேஷன் கட்டணக் குறைப்பையொட்டி அனைத்து நிறுவனங்களுமே உடனடியாக செல்போன், லேண்ட்லைன் மற்றும் வில்போன் கட்டணத்தைக் குறைக்க வேண்டும். அப்போதுதான் பலவீனமான இன்றைய பொருளாதாரச் சூழலில் வாடிக்கையாளரை உற்சாகத்துடன் தக்க வைத்துக் கொள்ள முடியும்' என ட்ராய் அறிவித்துள்ளது.
இந்த டெர்மினேஷன் கட்டணக் குறைப்பு, தொலைபேசித் துறையில் கால்பதித்துள்ள புதிய நிறுவனங்களுக்கு மிகவும் உற்சாகம் தருவதாக அமைந்துள்ளது. குறிப்பாக ஜிஎஸ்எம் செல்போன் சேவை வழங்கும் நிறுவனக்களுக்கு இது மிகவும் பயன்தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. வியாபாரத்தைத் தக்க வைத்துக் கொள்ளவும், புதிய வாடிக்கையாளர்களைக் கவரவும் அவர்களுக்கு இந்த கட்டணக் குறைப்பு உதவும்.
பொருளாதார நிலை மோசமடைந்து வரும் இந்த கால கட்டத்திலும் கூட, தொலைபேசித் துறை மட்டுமே தொடர்ந்து லாபத்தில் இயங்கி வருகிறது. கடந்த ஆண்டை விட 15 சதவிகித கூடுதல் வாடிக்கையருடன் வளர்ச்சியைப் பெற்றுள்ளது தொலைபேசித் துறைதான் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications