தீவிரவாதம்-மாஜி யாகூ என்ஜீனியருக்கு ரிமாண்ட்
Ex-Yahoo engineer charged as terrorist, தீவிரவாதம்-மாஜி யாகூ என்ஜீனியருக்கு ரிமாண்ட்
டெல்லி: யாகூ நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் முகம்மத் பீர்பாய் இந்தியன் முஜாகிதீன் தீவிரவாத அமைப்புடனான தொடர்புகளுக்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 13ம் தேதி டெல்லியில் தொடர் குண்டுவெடிப்பு நடந்தது. இது தொடர்பாக பீர்பாயை போலீசார் கைது செய்தனர்.
இந்தியன் முஜாகிதீன் உறுப்பினரான இவர் சில காலம் யாகூ நிறுவனத்தில் வேலை பார்த்துள்ளார். அங்கு இன்டர்நெட் பாதுகாப்பு குறித்த பயிற்சிகளை பெற்றுள்ளார். யாகூ நிறுவனம் ஹைதராபாத்தில் ஏற்பாடு செய்திருந்த இந்த பயிற்சியில் இன்டர்நெட் பாதுகாப்பை எப்படி தகர்ப்பது என்பது குறித்தும் பின்னர் அதை எப்படி அதிலிருந்து காப்பது ஆகியவற்றை அவருக்கு ரூ. 70,000 செலவில் யாகூ சொல்லி கொடுத்துள்ளது.
இந்த பயிற்சியை முறையாக முடித்த அவர் அதை முறையற்ற செயல்களுக்கு பயன்படுத்தத் துவங்கினார். அருகிலிருக்கும் வை-பை இன்டர்நெட் வாடிக்கையாளர்களின் இணைப்பை அவர்களுக்கு தெரியாமல் தனது கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்து அதிலிருந்து இந்திய முஜாகிதீன் அமைப்பு சார்பில் வெடிகுண்டு மிரட்டல்களை விடுத்துள்ளார்.
போலீஸ் விசாரணையின் போது பீர்பாய் கூறுகையில், எனக்கு இத்தாலிய நிபுணர் ஒருவர் பயிற்சி அளித்தார். இந்த பயிற்சிகள் 2007 மே மாதம் ஹைதராபாத்தில் நடந்தது என்றார்.
இந்நிலையில் இவர் மீதான போலீஸ் காவலை ஏழு நாட்களுக்கு நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கையை டெல்லி தலைமை மெட்ரோ நீதிபதி காவேரி பவஜா ஏற்று கொண்டு, அனுமதி அளித்தார்.












Click it and Unblock the Notifications