அமைச்சரானார் கருணா-ராஜபக்சே பதவி பிரமாணம்
கொழும்பு: விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் தளபதி கருணாவுக்கு அமைச்சர் பதவி தந்துள்ளார் அதிபர் ராஜபக்சே.
நேற்று அவர் இலங்கை தேசிய ஒற்றுமை மற்றும் மறு சீரமைப்பு துறை அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ராஜபக்சே பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
விடுதலைப் புலிகள் இயக்கத்தில் தளபதியாக இருந்த கருணாவின் கட்டுப்பாட்டில் தான் கிழக்குப் பகுதியை ஒப்படைத்திருந்தார் பிரபாகரன்.
ஆனால், கடந்த 2004ம் ஆண்டு பல்லாயிரக்கணக்கான புலிகளுடன் எல்டிடிஇ இயக்கத்தை விட்டு வெளியேறிய கருணா தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் என்ற கட்சியை தொடங்கினார்.
இதையடுத்து ராணுவத்தின் ஆதரவுடன் செயல்பட்டு வரும் கருணாவுக்கு முதலில் எம்பி பதவி தந்தார் ராஜபக்சே.
இந் நிலையில் நேற்று தனது ஆதரவாளர்களுடன் சென்று ராஜபக்சேவை சந்தித் கருணா அவரது அமைப்பைக் கலைத்துவிட்டு ராஜபக்சேவின் ஸ்ரீலங்கா சுதந்திரா கட்சியில் இணைந்தார்.
இதைத் தொடர்ந்து சிறிது நேரத்தில் அவருக்கு அமைச்சர் பதவி தரப்பட்டது. உடனடியாக பதவிப் பிரமாணமும் செய்து வைத்தார் ராஜபக்சே.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications