விஜயகாந்த்-பிரேமலதாவும் போட்டி?

லோக்சபா தேர்தலில் போட்டியிடும் தேமுதிகவினர் நேற்று முதல் விருப்ப மனுக்கள் அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து நேற்று காலை கோயம்பேட்டில் உள்ள கட்சி தலைமையகத்தில் விண்ணப்ப மனுக்கள் விநியோகம் தொடங்கியது.
பெரும் திரளான கட்சியினர் போட்டி போட்டுக் கொண்டு விண்ணப்பங்களைப் பெற்றனர். கட்சி அலுவலகமே விழாக் கோலம் பூண்டிருந்தது. அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், தலைமை நிலைய செயலாளர் பார்த்தசாரதி ஆகியோர் மனுக்களை வினியோகித்தனர்.
கட்சியின் சென்னை மத்திய மாவட்ட செயலாளர் தாமரைக்கண்ணன் என்பவர், விஜயகாந்த்துக்கு மத்திய சென்னையில் சீட் கோரி விண்ணப்பம் தந்தார்.
அதே போல் தென் சென்னையில் விஜயகாந்த் போட்டியிட கிரிராஜ் மனு செய்தார். இன்று ஆரணி தொகுதியில் விஜயகாந்த் போட்டியிட சடகோபன் என்பவர் மனு தந்தார்.
இதனால் விஜயகாந்த் எம்.பி. தேர்தலில் போட்டியிடக் கூடுமோ என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
பிரேமலதாவுக்கும் மனு:
அதே போல கோவை தொகுதியில் விஜயகாந்த்தின் மனைவி பிரேமலதா போட்டியிட கோரி பலர் மனு தாக்கல் செய்துள்ளனர்.
இதனால் கோவையில் பிரேமலதா போட்டியிட வாய்ப்புகள் உள்ளதாக கட்சி வட்டாரத்தில் பேசப்படுகிறது.
கடந்த சட்டசபை தேர்தலில் கோவை மாவட்டத்தில் தே.மு.தி.க. அதிக ஓட்டுகளை பெற்றது குறிப்பிடத்தக்கது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications