ராமதாஸ்-விஜய்காந்த்..காத்திருக்கும் 'கொக்குகள்' திமுக-அதிமுக

மக்களவைக்கு மே 13ம் தேதி வாக்குப்பதிவு நடக்கவுள்ள நிலையில் ஏப்ரல் 17ம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது.
திமுக-காங்கிரஸ், அதிமுக- மதிமுக- இடதுசாரிகள் கூட்டணியும், பாஜக தனித்தும் தேர்தலை சந்திக்கவுள்ளன. காங்கிரசால் எதிர்க்கப்படும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தன்னை கூட்டணியில் திமுக சேர்க்குமா இல்லையா என்ற குழப்பத்தில் உள்ளது.
தேர்தல் வேகமாக நெருங்கி வரும் நிலையில் மடமடவென தொகுதிப் பங்கீட்டை முடித்துவிட்டு, வேட்பாளர்களை அறிவித்துவிட்டு, பிரச்சாரத்தில் குதிக்க திமுக, அதிமுக தலைமைகள் தீவிரமாக இருந்தாலும் பாமக, தேமுதிக ஆகியவற்றின் மெளனம் இந்தக் கட்சிகளையும் வேகமாக செயல்பட விடாமல் பிரேக் போட்டு வைத்துள்ளது.
பாமகவை கூட்டணிக்குள் இழுக்க அதிமுக தீவிர முயற்சிகளில் இறங்கியுள்ளது. அதே நேரத்தில் திமுகவும் ராமதாசுக்கு சமாதானக் கொடியை பறக்கவிட்டு இழுக்க முயற்சிக்கிறது.
அதே நேரத்தில் தேமுதிகவை திமுக கூட்டணிக்குள் இழுக்க காங்கிரஸ் தீவிரம் காட்டி வருகிறது.
இந்தக் கட்சிகள் கூட்டணிக்குள் வந்தால் தான் யாருக்கு எத்தனை இடம் என்பதை இறுதி செய்ய முடியும்.
கூட்டணி தொடர்பாக பாமகவில் மாறுபட்ட கருத்துக்கள் நிலவுவது தெரிய வந்துள்ளது. ராமதாஸ், ஜி.கே.மணி போன்ற மூத்த தலைவர்களும், காடுவெட்டி குரு போன்ற கட்சியின் முக்கிய நிர்வாகிகளும் அதிமுகவுடன் கூட்டணி சேர விரும்புகின்றனர்.
ஆனால் மத்திய அமைச்சர் டாக்டர் அன்புமணி உள்ளிட்ட சில நிர்வாகிகள் திமுக-காங்கிரஸ் கூட்டணியிலேயே தொடரலாம் என்று கூறுவதாகத் தெரிகிறது.
நேற்று இலங்கை பிரச்சனைக்காக ஜெயலலிதா உண்ணாவிரதம் இருந்தபோது அவரைப் பாராட்டிப் பேச பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதன்மூலம் கூட்டணியும் இறுதியாகும் என்று கருதப்பட்டது. ஆனால், அதிமுகவை மாபெரும் அரசியல் சக்தி என்று புகழ்ந்து அறிக்கை விட்டதோடு ராமதாஸ் நின்றுவிட்டார்.
ராமதாஸை உண்ணாவிரதக் கூட்டத்துக்கு போக விடாமல் தடுத்தது அன்புமணி தான் என்கிறார்கள்.
மேலும் பாமகவின் செயற்குழு, பொதுக்குழு கூட்டங்கள் இன்று தைலாபுரத்தில் நடைபெறலாம் என்று கூறப்பட்டது. ஆனால் கூட்டங்கள் நடக்கவில்லை. இதற்கு கூட்டணி விஷயத்தில் பாமகவில் நிலவும் குழப்பமே காரணம் என்று தெரிகிறது.
காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை திமுகவிடம் கூடுதல் தொகுதிகளைப் பெற்று அதில் உள் ஒதுக்கீடு மூலம் தேமுதிகவுக்கு தொகுதிகளைப் பிரித்துத் தர திட்டமிட்டுள்ளது.
இதற்காக விஜய்காந்துடன் டெல்லி தலைவர்களும் பண்ருட்டி ராமச்சந்திரனுடன் மாநில காங்கிரஸ் தலைவர்களும் பேச்சு நடத்தி வருகின்றனர். ஆனால், இத்தனை காலம் திமுகவை விமர்சித்துவிட்டு அவர்களுடன் கூட்டணி வைப்பது தனது கட்சி மீதான நம்பிக்கையை குலைத்துவிடும் என விஜய்காந்த் கருதுகிறார்.
ஆனால், நிர்வாகிகளோ கூட்டணி வைத்தால் தான் சில இடங்களிலாவது வெல்ல முடியும் என்று விஜய்காந்தை நச்சரித்து வருகின்றனர்.
தேமுதிகவுக்கு 3 இடங்கள் வரை தர காங்கிரஸ் தயார் என்றும், தேமுதிக தரப்போ 7 இடங்கள் கேட்பதாகவும் ஒரு தகவல் உலா வருகிறது.
பாமக, தேமுதிகவின் இந்த இழுபறியால் அதிமுக கூட்டணியில் மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளுக்கு தொகுதிப் பங்கீடு செய்வது தாமதமாகியுள்ளது.
முதல் கட்ட பேச்சுவார்த்தையோடு எல்லாமே அப்படியே நிற்கிறது.
விஜய்காந்தை உள்ளே இழுத்து வருவதற்கு காங்கிரசுக்கு கால அவகாசம் தந்து திமுகவும் இடப் பங்கீட்டை ஆறப் போட்டு காத்திருக்கிறது.
நாளை அமைச்சர் ஆற்காடு வீராசாமியின் இல்லத் திருமணம் நடக்கிறது. இதில் முதல்வர் கருணாநிதி கலந்து கொள்கிறார். சில மாதங்களுக்கு முன் இதே ஆற்காடு வீராசாமியின் இல்லத் திருமணத்தில் தான் பாமகவை கூட்டணியைவிட்டு வெளியேற்றுவதாக திமுக அறிவித்தது.
நாளை நடக்கும் திருமணத்தில் பாமகவுக்கு முதல்வர் கருணாநிதி மீண்டும் முறைப்படி கூட்டணி அழைப்பு விடுக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
எப்படியும் இன்னும் ஒரு வாரத்துக்கும் பாமகவும், விஜயகாந்த்தும் ஒரு முடிவுக்கு வந்துவிடுவார்கள் என்று எதி்ர்பார்க்கப்படுகிறது. அதன் பிறகே தொகுதி பங்கீடுகள் ஆரம்பமாகும்.
-
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications