நாகர்கோவிலில் கோடீஸ்வரர் படுகொலை
நாகர்கோவில்: நாகர்கோவிலில் கோடீஸ்வரர் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார்.
நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் அருகே ஜவஹர் தெருவில் வசி்த்து வந்தவர் சங்கரநாராயண ரெட்டியார். துபாயில் கான்டிராக்ட் தொழில் செய்து வந்த அவருக்கு நாகர்கோவிலில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துகளும், நெல்லை வண்ணார்பேட்டையில் பெரிய வணிக வளாகமும் உள்ளது.
இவருக்கு பார்வதி என்ற மனைவியும், ரமேஷ், ராதா, சிவா என்ற 3 மகன்களும் உள்ளனர். இதில் முதல் மகன் ரமேஷ் வண்ணார்பேட்டையில் கடை வைத்துள்ளார். 2வது மகன் ராதா சென்னையில் தனியார் செல்போன் கடையும், 3வது மகன் சிவா வெளிநாட்டில் தனது தந்தையின் தொழிலையும் நடத்தி வருகின்றனர்.
நேற்று மாலை 5.30 மணியளவில் தனது வீட்டு வராண்டாவில் அமர்ந்திருந்த ரெட்டியாரை யாரோ மர்ம நபர்கள் கத்தியால் வயிறு மற்றும் விலா பகுதியிலும், குத்திவிட்டு ஓடிவிட்டனர். இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
அவரது அலறல் சத்தம் கேட்டு அருகிலிருந்த தனியார் கல்லூரி விடுதி வார்டன் ஒருவர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
இதையடு்த்து நேசமணி நகர் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications