கொட்டை பாக்கு கடத்தியவர் 'காபிபோசா'வில் கைது
தூத்துக்குடி: இந்தோனைசியாவில் இருந்து சட்டத்துக்கு புறம்பாக கொட்டை பாக்கு கடத்திய தூத்துக்குடி தொழிலதிபரை போலீசார் கைது செயது, மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்தோனேசியாவிலிருந்து தூத்துக்குடிக்கு கொட்டை பாக்கு கடத்தி வரப்பட்டு, நாக்பூரில் உள்ள ஒரு பாக்கு கம்பெனிக்கு கொண்டு செல்ல முயன்றபோது அவற்றை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
விசாரணையில் இதில் தூத்துக்குடியை சேர்ந்த நிறுவனம் ஈடுபட்டது தெரிய வந்தது. இதன் உரிமையாளரான சென்னையை சேர்ந்த நிதின்நாயார் என்பவர் இதுபோன்ற கடத்தலில் ஈடுபட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது.
அவர் தொடர்ந்து இக்குற்றங்களில் ஈடுபட்டு வந்ததால் அவரை கடத்தல் மற்றும் வெளிநாட்டு பொருளாதார குற்றவியல் சட்டமான காபிபோசா (COFEPOSA) சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என சென்னை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு கூடுதல் இயக்குனர் அரசுதுறை இணை செயலாளருக்கு பரிந்துரை செய்தார்.
இதனை தொடர்ந்து நிதின்நாயாரை காபிபோசா சட்டத்தின் கீழ் கைது செய்ய அரசு உத்தரவிட்டது. தூத்துக்குடி மத்திய வருவாய் புனலாய்வு பிரிவு அதிகாரிகள் நிதின்நாயாரை கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர். நீண்ட இடைவெளிக்கு பின்பு தமிழகத்தில் காபிபோசா சட்டத்தின் கீழ் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications