ஆடு திருடிய தகராறில் 4 பேர் வெட்டிக் கொலை
சேரன்மகாதேவி: நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் பகுதியில் ஆடு திருடியது தொடர்பாக நடந்த மோதலில் நான்கு பேர் அநியாயமாக வெட்டிக் கொல்லப்பட்டனர்.
வீரவநல்லூர் அருகே அத்தாளநல்லூர் கோட்டை தெருவை சேர்ந்தவர் சின்னத்துரை என்ற நவநீதகிருஷ்ணன். விவசாயி. இவர் வளர்த்து வந்த 4 ஆடுகள் காணாமல் போயின.
இதுகுறித்த சின்னத்துரை உப்பூரை சேர்ந்த மாயாண்டியிடம் எனது ஆடுகளை நீ திருடினாயா என கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. நேற்று மாலை சின்னத்துரை தனது அக்காள் பழனியம்மாளுடன் உப்புவாணிமுத்துரில் உள்ள வயலில் அறுவடை செய்து கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த மாயாண்டி மற்றும் அவரது நண்பர்கள் குணசேகரன், மகாராஜன் உள்ளிட்ட 8 பேர் சின்னத்துரையுடன் தகராறு செய்தனர். தகராறு முற்றவே ஆத்திரமடைந்த மாயாண்டி அரிவாளால் சின்னத்துரையை சராமரியாக வெட்டினார்.
தடுக்க வந்த அவரது அக்காள் பாண்டியம்மாளுக்கும் வெட்டி விழுந்தது. இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
பாண்டியம்மாளின் மகன் மணிகண்டன் நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். மேலும் சின்னத்துரையின் உறவினர்கள் முத்துபாண்டி, மற்றொரு மணிகண்டன், மற்றும் மாயாண்டியின் நண்பர் குணசேகர் ஆகியோருக்கும் சராமரி வெட்டு விழுந்தது.
அனைவரும் அம்பை, நெல்லை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
தகவல் அறிந்ததும் நெல்லை எஸ்பி ஆஸ்ரா கர்க், அம்பை டிஎஸ்பி ராஜமேகன், வீரவநல்லூர் இன்ஸ்பெக்டர் முருகேசன் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். இந்நிலையில் நள்ளிரவில் சிவன் பாண்டியின் மகன் குணசேகர் சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார்.
-
"10 வயது குழந்தையை கொன்னுட்டீயே.." கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளியை தாக்கிய சக கைதிகள்? -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications