சுப்ரமணிய சாமி மீது முட்டை வீசப்பட்ட வழக்கு - இன்று விசாரணை
Subscribe to Oneindia Tamil

சிதம்பரம் நடராஜர் கோவில் தொடர்பான வழக்கில் தன்னையும் சேர்த்துக் கொள்ளக் கோரி மனு செய்ய உயர்நீதிமன்றத்திற்கு வந்திருந்தார் சாமி. அப்போது அவரை சில வக்கீல்கள் முட்டைகளை வீசித் தாக்கினர்.
இதையடுத்து சில வக்கீல்கள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். அவர்களைக் கைது செய்து கொண்டு செல்ல முயன்றபோது உயர்நீதிமன்றத்தில் வரலாறு காணாத வன்முறை மூண்டது.
இந்த நிலையில், சாமி மீது முட்டை வீசப்பட்ட வழக்கை ஐந்து நீதிபதிகள் கொண்ட் பெஞ்ச் விசாரிக்கவுள்ளது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.
இதுதவிர சென்னை உயர்நீதிமன்ற மோதல் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட, உச்சநீதிமன்றம் சென்னையி்ல் வைத்து விசாரிக்குமாறு உத்தரவிட்ட அனைத்து வழக்குகளும் இன்றே சென்னை உயர்நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.












Click it and Unblock the Notifications