திமுகவுடன் நாளை பேச்சு-காங்கிரஸ் குழு ஆலோசனை
சென்னை: திமுக அமைத்துள்ள தொகுதிப் பங்கீட்டு குழுவுடன் காங்கிரஸ் குழு நாளை முதல் கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளது. திமுகவுடன் பேச வேண்டியது தொடர்பாக காங்கிரஸ் தொகுதிப் பங்கீட்டுக் குழு உறுப்பினர்கள் கூடி இன்று ஆலோசனை நடத்தினர்.
திமுகவுடன் தொகுதிப் பங்கீடு குறித்துப் பேச காங்கிரஸ் தலைவர் தங்கபாலு தலைமையில் மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், ஜி.கே.வாசன், இளங்கோவன், சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் சுதர்சனம் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இந்த குழுவின் ஆலோசனை கூட்டம் சென்னையில் சத்தியமூர்த்தி பவனில் இன்று நடந்தது. இதில் சிதம்பரம் பங்கேற்கவில்லை. அதே நேரத்தில் இக்குழுவினர் தவிர கிருஷ்ணசாமி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
கடந்த தேர்தலில் காங்கிரஸ் 10 தொகுதிகளில் போட்டியிட்டது. இம்முறை 15 இடங்கள் வரை கேட்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. அந்த இடங்கள் எவை எவை என்பது குறித்து இன்றைய கூட்டத்தில் பேசப்பட்டது.
இக் கூட்டத்திற்குப் பின்னர் தங்கபாலு செய்தியாளர்களிடம் பேசுகையில், திமுக அமைத்துள்ள ஐந்து உறுப்பினர் குழுவுடன் நாளை மால 5 மணிக்கு நாங்கள் பேசவுள்ளோம்.
இது முதல் கட்ட பேச்சுவார்த்தையாகும். எங்களது கருத்துக்களை, கோரிக்கைகளை அவர்களிடம் தெரிவிப்போம். அதுகுறித்தே இன்று ஆலோசனை நடத்தப்பட்டது என்றார்.
ஸ்ரீபெரும்புதூர் கோரி ஆர்ப்பாட்டம்:
இதற்கிடையே, ஸ்ரீபெரும்புதூர் தொகுதியை காங்கிரஸுக்கே ஒதுக்க வேண்டும் என்று கோரி சோளிங்கர் தொகுதி எம்.எல்.ஏ. அருள் அன்பரசு தலைமையி்ல அவரது ஆதரவாளர்கள் சத்தியமூர்த்தி பவன் வளாகத்தி்ல் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
-
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications