ராணுவ புரட்சி பீதியில் பாக்-அதிபர் சர்தாரி எங்கே?
இஸ்லாமாபாத்: முன்னாள் பிரமதரும், பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சியின் தலைவருமான நவாஸ் ஷெரீப் அழைப்பு விடுத்துள்ள கராச்சி முதல் இஸ்லாமாபாத் வரையிலான நடைபயணம் இன்று தொடங்குகிறது.
ராணுவப் புரட்சி வெடிக்கும் அபாயத்தின் பின்னணியில், ஈரான் சென்றிருந்த அதிபர் சர்தாரி நேற்று இரவு நாடு திரும்பிவிட்டதாகக் கூறப்பட்டாலும் அவர் எங்கேயிருக்கிறார் என்பது தெரியவில்லை. இதனால் பாகிஸ்தானில் அடுத்து என்ன நடக்கப் போகிறது என்ற பரபரப்பும், எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
பாகிஸ்தான் முழுவதும் பெரும் கொந்தளிப்பான நிலை காணப்படுகிறது. நாட்டின் பாதுகாப்பை கவனியுங்கள், இல்லாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிபர் சர்தாரிக்கு, ராணுவ தலைமை தளபதி பர்வேஸ் கியானி பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அதேபோல சர்தாரிக்கும், நவாஸ் ஷெரீப்புக்கும் இடையிலான யுத்தமும் வேகம் பிடித்துள்ளது. நவாஸ் ஷெரீப் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் நாடு முழுதும் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் நேற்று பெரும் நெருக்கடியான நிலை ஏற்பட்டது. பல எதிர்க்கட்சித் தலைவர்கள் கைது செய்யப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர். ஷெரீபும் காவலில் வைக்கப்பட்டு விடுவிக்கப்பட்டார்.
நாடு திரும்ப சர்தாரிக்கு தடை:
உள்துறை அமைச்சகம் எந்த முடிவை எடுத்தாலும் எங்களைக் கேட்டு விட்டுத்தான் செயல்படுத்த வேண்டும் என ராணுவம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஈரான் சென்றிருந்த சர்தாரி மீண்டும் நாடு திரும்ப வேண்டாம் என ராணுவத் தரப்பி்ல் அறிவுறுத்தப்பட்டது. இதனால் பாகிஸ்தானில் எந்த நேரத்திலும் புரட்சி வெடிக்கும் அபாயம் எழுந்தது.
இந்த பரபரப்பான பின்னணியில் பதவி நீக்கம் செய்யப்பட்ட உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி இப்திகார் செளத்ரி மற்றும் பிற நீதிபதிகளை மீண்டும் அப்பொறுப்பில் நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் நவாஸ் ஷெரீப் கட்சியினர் இன்று கராச்சியிலிருந்து இஸ்லாமாபாத் வரை நடைபயணம் மேற்கொண்டுள்ளனர்.
இதுபோன்ற தருணம் வரலாற்றில் அடிக்கடி கிடைக்காது. எனவே பொதுமக்களும், வக்கீல்களும், கட்சியினரும் பெரும் திரளாக இதில் பங்கேற்று இதை பெரும் வெற்றி அடையச் செய்ய வேண்டும். உங்களது நாட்டின் எதிர்காலம் இப்போது உங்களது கையில். எனவே இதை யாரும் தவற விட்டு விடக் கூடாது என்று நவாஸ் ஷெரீப் அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.
தடை மீறி நாடு திரும்பிய சர்தாரி?:
இதற்கிடையே தனக்கு ராணுவம் தடை விதித்ததால் நவாஸ் ஷெரீப்பின் போராட்டம் முடியும் வரை அதிபர் சர்தாரி நாடு திரும்ப மாட்டார் என்றும், ஈரானில் இருந்து அவர் துபாய் சென்றுவிடுவார் என்றும் கூறப்பட்டது.
ஆனால், சர்தாரி நேற்று இரவோடு இரவாக இஸ்லாமாபாத் திரும்பியதாகக் கூறப்பட்டது. ஆனால், அவர் எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை.
நிலைமை மோசமாகி வருவதால் தளபதி கியானி ராணுவ புரட்சி மூலம் ஆட்சியை கைப்பற்றலாம் என்று சர்தாரி எதிர்பார்க்கிறார்.
இதற்கு இடம் கொடுக்காமல் நவாஸ் ஷெரீப்புடன் சமரசமாக சென்றுவிடவும் அவர் முயற்சித்து வருகிறார். பஞ்சாபில் கவர்னர் ஆட்சியை வாபஸ் பெற்று மறுபடியும் நவாஸ் ஷெரீப் தம்பி ஆட்சி அமைக்க உதவவும் அவர் தயாராக இருப்பதாகத் தெரிறது.
முன்னதாக வீட்டுக் காவலில் வைக்கப்பட்ட இம்ரான் கான் விடுவிக்கப்பட்டதும் தலைமறைவாகிவிட்டார். அவரும் சர்தாரிக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications