சத்யம் ஏலம்: ரேஸில் எல் அண்டு டி, ஸ்பைஸ், டெக் மஹிந்திரா!
சென்னை: பெரும் நிதி மோசடிகளால் கலகலத்துப்போன சத்யம் நிறுவனத்தின் 51 சதவிகித பங்குகளை வாங்க எல் அண்டு டி, டெக் மஹிந்திரா மற்றும் ஸ்பைஸ் குழுமம் ஆகியவை மோதுகின்றன.
இந்தப் பங்குகளை வாங்குவதற்கான ஏலத்தில் பங்கேற்ற நேற்று வியாழக்கிழமை கடைசி நாள். அதனால் நேற்றே இந்த மூன்று நிறுவனங்கள் தங்கள் ஆவணங்களைச் சமர்ப்பித்துவிட்டன.
இம்மூன்று நிறுவனங்களில் எல் அண்டு டி நிறுவனத்திடம் ஏற்கெனவே 12 சதவிகித சத்யம் பங்குகள் உள்ளன. எனவே இந்தப் போட்டியில் எப்படியாவது வென்றுவிட வேண்டும் என்பதே அதன் நோக்கமாக உள்ளது.
பி.கே. மோடியின் ஸ்பைஸ் நிறுவனத்தைப் பொறுத்தவரை, விமானப் போக்குவரத்துடன், ஐடி மற்றும் பொழுதுபோக்குத் துறையிலும் கால்பதிக்கும் நோக்கில் சத்யம் பங்குகளை வாங்க முனைகிறது.
ஆனால் டெக் மஹிந்திராவின் திடீர் போட்டிதான் பலரும் எதிர்பாராத ஒன்றாக உள்ளது. ஐடி துறையில் டெக் மஹிந்திராவுக்கென்று தனி இடம் உள்ளது. இப்போது சத்யம் நிறுவனத்தையும் வாங்குவதன் மூலம் ஐடி துறையில் தனிப்பெரும் நிறுவனமாக முதலிடத்துக்கு வர முயல்வது தெரிகிறது.
தற்போது சத்யம் பங்குகளை வாங்க பதிவு செய்துள்ள நிறுவனங்களுக்கு விரைவில் கடிதங்கள் அனுப்பப் படும். குறைந்தபட்ச ரொக்க இருப்பு ரூ.1500 கோடி வைத்துள்ள நிறுவனங்கள் இறுதி ஏலத்தில் கலந்து கொள்ளத் தகுதியுடையவையாகக் கருதப்படும். அடுத்த வெள்ளிக்கிழமை (மார்ச் 20-ம்) தேதி மாலை 5 மணிக்குள் இந்தத் தொகையை தயாராக வைத்திருக்க வேண்டும், ஏலத்தில் பங்கேற்கும் நிறுவனங்கள்.
ஏலத்துக்கு முந்தைய தினம், பங்குச் சந்தையில் நிலவும் மதிப்பின் அடிப்படையில் சத்யம் நிறுவனத்தின் 51 சதவிகித பங்குகள் ஏலத்தில் விடப்படும்.
-
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications