பிளஸ் 2 வேதியியல் தேர்வில் குளறுபடி- மாணவர்கள் சோகம்
சென்னை: நேற்று நடந்த பிளஸ் 2 வேதியியல் தேர்வில் 6 மதிப்பெண்களுக்கு தவறான கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. மருத்துவ மற்றும் என்ஜினியரிங் படிப்பில் சேர விரும்பும் மாணவர்களுக்கு இப்பாடம் முக்கியமானது என்பதால் மாணவர்கள் சோகத்தில் இருக்கின்றனர்.
தமிழ்நாடு முழுவதும் இந்த ஆண்டு சுமார் 7 லட்சம் மாணவர்கள் பரீட்சை எழுதுகின்றனர். நேற்று வேதியியல் தேர்வு நடந்தது. தேர்வு எழுதிவிட்டு வெளியே வந்த மாணவர்கள் முகத்தில் மகிழ்ச்சியை தென்படவில்லை.
தேர்வின் முதல் பகுதி எளிதாக இருந்தது, என்றும் இரண்டாவது பகுதி மிகவும் கடினமாக இருந்ததும் என்று கூறினர்.
வினாத்தாளில் இருந்த 34ம் கேள்வி பாடத்திட்டத்தில் இல்லையென்றும், அதே போல் 38ம் கேள்விக்கு படம் வரையச் சொல்லி கேட்கப்பட்டது. இவ்வழக்கம் வேதியியல் தேர்வுக்கு புதிது எனவும் குறை சொல்லப்பட்டது.
இந்த இரு கேள்விகளும் தலா மூன்று மதிப்பெண் கொண்டவை. இவை இரண்டிலும் ஏற்பட்ட குளறுபடி காரணமாக வேதியியலில் 200 மதிப்பெண்கள் வாங்க வேண்டும் என லட்சியத்துடன் படித்த மாணவர்கள் தற்போது படபடப்பில் மூழ்கியுள்ளனர்.
இதுகுறித்து ஆசிரியர்கள் கூறுகையில், தமிழக அரசு இந்த இரு கேள்விகளுக்கும் முழு மதிப்பெண் அளிக்க உடனடியாக உத்தரவிட வேண்டும். அப்போது தான் மாணவர்களால் அடுத்து வரும் தேர்வுகளுக்கு சிறப்பாக தயாராக முடியும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications