ரூ.100 கோடியில் ஐடிஜி-மைக்ரோசாப்ட் கூட்டு முயற்சி!
பெங்களூர்: ஐடிஜி வென்சர்ஸ் நிறுவனமும் ஐடி ஜாம்பவான் மைக்ரோசாப்ட் நிறுவனமும் இணைந்து புதிய முதலீட்டுத் திட்டத்தைத் துவங்கியுள்ளன.
இந்தத் திட்டப்படி மைக்ரோசாப்டின் புதிய தொழில்நுட்ப வசதிகள் எந்த செலவும் இல்லாமல் ஐடிஜி வென்சர்ஸுக்குக் கிடைக்கும். இந்தத் திட்டப்படி ரூ.100 கோடியை ஐடிஜி முதலீடாக செய்யும்.
தொழிலை ஆரம்பித்து 3 வருடங்கள் பூர்த்தியடைந்த, ஆண்டு வருமானம் குறைந்தது ரூ.5 கோடி கொண்ட நிறுவனங்கள் அனைத்தும் ஐடிஜி மூலம் மைக்ரோசாப்டின் புத்தம் புது தொழில் நுட்பங்களை பெற்றுக் கொள்ளலாம். இதற்கு பைசா கூட செலவு கிடையாது. நிறுவனங்கள் செய்ய வேண்டியதெல்லாம், தங்கள் பிஸினஸ் பிளான் மற்றும் நிறுவன விவரங்களை தெளிவாக ஐடிஜிக்கு சமர்ப்பிக்க வேண்டும். ஐடிஜி வரையறைகளுக்குட்பட்ட நிறுவனங்களுக்கு ரூ.25 கோடி ஆரம்ப முதலீடும் தரப்படும்.
இந்த திட்டத்தின் துவக்க நிகழ்ச்சியன்று பேசிய மைக்ரோசாப்ட் இந்தியாவின் நிர்வாக இயக்குநர் ராஜன் ஆனந்தன், "மைக்ரோசாப்ட் பிஸ்பார்க் என்ற இந்த திட்டத்தை ஆரம்பித்த மூன்றே மாதங்களில் 275 நிறுவனங்கள் எங்களிடம் பதிவு செய்து, மைக்ரோசாப்டின் ஒரிஜினல் சாப்ட்வேர்களைப் பெற்றுள்ளன. இதற்கு கட்டணமாக எதையும் நாங்கள் பெறவில்லை.
ஐடிஜியின் இந்த திட்டத்தில் இணைந்து ஆரம்ப முதலீடு பெறும் நிறுவனங்கள் விரைவான வளர்ச்சியைப் பெறுவது எளிதாகிறது. ஐடி மற்றும் இதர புதிய நிறுவனங்களுக்கு ஆரம்ப முதலீடும், தொழில்நுட்ப வசதியும் மிகமிக முக்கியமானது. அதுவும் இன்றைய இந்தியச் சூழலில் ஆரம்ப உதவிகள் இல்லாமல் ஒரு புதிய நிறுவனத்தால் தாக்குப் பிடிக்கவே முடியாது, என்றார்.
ஐடிஜி வென்சர்ஸ் தலைவர் சுதீர் சேத்தி கூறுகையில், "இன்றைய பொருளாதாரச் சூழலில் ஆரம்ப முதலீடு பெரிய விஷயமில்லை. அடுத்து உடனே போட வேண்டிய கூடுதல் முதலீடுதான் முக்கியம். புதிய நிறுவனங்கள் ஆரம்பத்திலேயே முடங்கிப் போவது அந்த கூடுதல் முதலீடு இல்லாததால்தான். அந்தக் குறையைப் போக்குவதுதான் ஐடிஜி-மைக்ரோசாப்ட் கூட்டு முயற்சியின் நோக்கம்" என்றார்.
கூடுதல் நிதி தேவைப்படும் நிறுவனங்கள் www.idgvcindia.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் விவரங்களை அனுப்பி வைக்கவும். உடனடியாக ஐடிஜியிலிருந்து அந்த நிறுவனங்களுக்கு ஒரு குறிப்பெண் அனுப்பப்படும். இதைப் பயன்படுத்தி இலவச மென்பொருட்களைப் பெற்றுக் கொள்ளலாம். பின்னர் இந்த நிறுவனங்கள் விரிவான பிஸினஸ் பிளானை அனுப்பி வைத்து, கூடுதல் முதலீட்டையும் பெறலாம்.
அது என்ன மைக்ரோசாப்ட் பிஸ்பார்க்?:
இது ஒரு சர்வதேச திட்டம். வளரும் தொழில் நிறுவனங்களுக்கு மைக்ரோசாப்டின் அனைத்து மென்பொருள்களையும் இலவசமாகக் கொடுத்து வளர உதவும் திட்டம். தொடர்ந்து மூன்று ஆண்டுகளுக்கு, அந்த நிறுவனங்களுக்குத் தேவையான குறைந்தபட்ச மென்பொருள்கள் அனைத்தும் எந்த கட்டணமும் இல்லாமல் வழங்கப்படும். இதுபற்றிய முழுமையான விவங்களுக்கு www.MicrosoftStartupZone.com/bizspark என்ற மின்னஞ்சல் முகவரிக்கு எழுதிப் பெற்றுக் கொள்ளலாம்.
மைக்ரோசாப்ட் இந்தியா:
1975-ம் ஆண்டு துவங்கப்பட்ட மைக்ரோசாப்ட் நிறுவனத்துக்கு அறிமுகம் தேவையில்லை. உலக அளவில் மென்பொருள் தயாரிப்பில் நெம்பர் ஒன் நிறுவனம். 1990-களில்தான் இந்தியாவில் கால்பதித்தது மைக்ரோசாப்ட். இன்று சென்னை, மும்பை, டெல்லி, பெங்களூரு உள்ளிட்ட 16 நகரங்களில் பிரமாண்ட அலுவலகங்களுடன் கிளைபரப்பி நிற்கிறது மைக்ரோசாப்ட் இந்தியா. கூடுதல் தகவல்களுக்கு: www.microsoft.com/india/msindia
ஐடிஜி வென்சர்ஸ்:
150 மில்லியன் டாலர் முதலீட்டுடன் துவங்கப்பட்ட இந்த நிறுவனத்தின் பிரதான நோக்கம், வளரும்/புதிய நிறுவனங்களுக்கு ஆரம்ப முதலீடு மற்றும் கூடுதல் முதலீட்டை அளிப்பதுதான். மென்பொருள் உற்பத்தி, மின்னணு பொருள் உற்பத்தி, இன்டர்நெட், டிஜிடல் மீடியா, தொலைத் தொடர்பு, எஞ்சினீயரிங், சுகாதாரம், நிதிச் சேவை... இப்படி பலதுறைகளைச் சேர்ந்த நிறுவனங்களுக்கும் ஆரம்ப முதலீட்டை வழங்குகிறது ஐடிஜி.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
2026 தங்கம் வெள்ளி விலை சரியப்போகுது.. இந்த ஜூனில் வெடிக்க போகும் பலூன்? வல்லுநர்கள் கணிப்பு -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்!












Click it and Unblock the Notifications