கேரளத்தில் சிபிஎம்-சிபிஐ மோதல்: சமரசம்
திருவனந்தபுரம்: கேரளத்தில் இடப் பங்கீடு தொடர்பாக மார்க்சி்ஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதல் முடிவுக்கு வந்துள்ளது.
பொன்னானி தொகுதி யாருக்கு என்பதில் இரு கட்சிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதையடுத்து இடதுசாரிக் கூட்டணியை விட்டு விலகுவதாகவும் தனித்தே 20 இடங்களிலும் போட்டியிடுவதாகவும் இந்திய கம்யூனிஸ்ட் அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்டது.
இதையடுத்து டெல்லியில் இரு கட்சிகளின் மூத்த தலைவர்களும் சந்தித்துப் பேச்சு நடத்தி பிரச்சனையை தீர்த்தனர்.
பொன்னானி தொகுதியை இடதுசாரி கூட்டணியில் உள்ள மக்கள் ஜனநாயக கட்சிக்கு ஒதுக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் திட்டமிட்டது. ஆனால், இது தனது தொகுதி என்பதால் அதை இந்திய கம்யூனிஸ்ட் ஏற்கவில்லை.
இதையடுத்து அங்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியே போட்டியிட திட்டமிட்டு வேட்பாளரை அறிவித்தது. இதையும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஏற்கவி்ல்லை. அங்கு நாங்களே போட்டியிடுவோம் என அறிவித்து வேட்பாளரையும் அறிவித்தது.
இதைத் தொடர்ந்து இரு கட்சிகளின் மாநிலத் தலைவர்களும் ஒருவரை ஒருவர் தாக்கி அறிக்கைகள் வெளியிட, கூட்டணியை விட்டு வெளியேறுவதாக இந்திய கம்யூனிஸ்ட் நேற்று காலை அறிவித்தது.
இதைத் தொடர்ந்து இரவு டெல்லியில் இரு கட்சிகளின் தேசியத் தலைவர்களும் சந்தித்துப் பேசினர். அப்போது இந்தத் தொகுதிக்கு இரு கட்சிகளும் அறிவித்த வேட்பாளர்கள் வாபஸ் பெறப்பட்டனர்.
இரு கட்சிகளும் இணைந்து பேசி, தொகுதி யாருக்கு என்பதை முடிவு செய்து புதிய வேட்பாளரை நிறுத்துவது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இந் நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 13 தொகுதிகளுக்கு தனது வேட்பாளர்களை அறிவித்துள்ளது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications