இந்திய-இலங்கை ஒப்பந்தம்: எங்களுக்கு தொடர்பேயில்லை- புலிகள்

விடுதலைப் புலிகளின் அரசியல் ஆய்வு மையப் பொறுப்பாளர் யோகரத்தினம் வன்னியில் இருந்து ஒலிபரப்பாகும் புலிகளின் வானொலியான புலிகளின் குரல் ரேடியேவில் பேசுகையில் இதைத் தெரிவித்தார்.
அவர் கூறுகையில், இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை விடுதலைப் புலிகள்தான் ஏறி மித்தார்கள் என்று ப.சிதம்பரம் கூறியுள்ளார். நாங்கள் ஒப்பந்தத்தை ஏறி மிதிக்கவில்லை.
இந்திய-இலங்கை ஒப்பந்தம் அவர்களால் (இந்தியா-இலங்கை அரசுகளால்) செய்யப்பட்டது.
அந்த ஒப்பந்தத்தை செய்துவிட்டு இங்கே வந்த அவர்கள், நாங்கள் ஆயுதங்களை ஒப்படைத்த பின்னர் புலேந்தி அம்மான் போன்றவர்களை இலங்கை அரசு கைது செய்தபோது அவர்களைக் காப்பாற்ற முயற்சிக்கவில்லை.
ஆனால், இந்திய அரசு ஒப்பந்தத்தை காப்பாற்றுகிறோம் என்று கூறிக்கொண்டு எங்கள் மீது போர் தொடுத்தது. ஆறாயிரம் மக்களை கொன்று குவித்தது என்பதை ப.சிதம்பரம் மறந்து விட்டார்.
இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் அதிகாரங்களை பரவலாக்கி, வடக்கு-கிழக்கு கௌரவமாக இணைக்கப்பட்டது என்பது ராஜீவ் காந்தியால் கூறப்பட்ட ஒன்று. அதை உறுதியாக பேணியிருக்க வேண்டியதும் இந்திய அரசாங்கத்தின் கடமையாகும்.
இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை விடுதலைப் புலிகள் காலால் ஏறி மிதித்தனர் எனக் கூறுவதை பலர் அதனை ஏற்றுக்கொண்டு பேசுவதை நாங்கள் காண்கிறோம்.
இங்கே, நான் என்ன கூற வர விரும்புகின்றேன் என்றால் இந்த போலி வார்த்தைகளில் ஏமாறாதீர்கள்; மயங்காதீர்கள். எங்களைப் பொறுத்த வரை மிகப்பெரிய அழிவுக்குள்ளும் மிகப் பெரிய பேரழிவுக்குள்ளும் நின்று போராடுகிறோம். உறுதியாக போராடுகிறோம்.
இந்த போராட்டத்தில் நிச்சயம் வெற்றி பெறுவோம். எங்கள் பின்னால் உலகத் தமிழினமே ஒன்றுபட்டு நில்லுங்கள். நிச்சயமாக எங்களுக்கான ஒரு நாட்டை நாங்கள் விரைவில் அமைப்போம் என்று யோகரத்தினம் கூறியுள்ளார்.
-
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்!












Click it and Unblock the Notifications