கணக்கு காட்டாத 3,423 வேட்பாளர்களுக்கு தேர்தல் ஆணையம் தடை
டெல்லி: கடந்த லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு அதற்கான செலவு கணக்கை காட்டாத 3,423 வேட்பாளர்களுக்கு வரும் தேர்தலில் போட்டியிட தேர்தல் ஆணையம் 3 ஆண்டு தடை விதித்துள்ளது.
கடந்த 2004 நாடாளுமன்ற தேர்தலின் போது வேட்பாளர்கள் தங்களது தேர்தல் செலவு கணக்கை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது.
இதையும் மீறி பலர் தங்களது கணக்கு காட்டவில்லை. இதையடுத்து தேர்தல் ஆணையம் கடும் நடவடிக்கை எடுத்துள்ளது. மக்கள் பிரதிநிதித்துவம் சட்ட பிரிவ 10 ஏயின் படி மூன்று ஆண்டு தேர்தலில் போட்டியிட தடை விதிக்கக்கப்படும் என அறிவித்தது.
இதை தொடர்ந்து தற்போது கணக்கு காட்டாத 3,423 வேட்பாளர்களுக்கு அடுத்து மூன்றாண்டுக்கு தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டுள்ளது.
இவர்களில் அதிகபட்சமாக உபியை சேர்ந்த 1075 பேரும், பீகாரை சேர்ந்த 616 பேரும் உள்ளனர். இவர்களில் அனேகர் அங்கு சட்டமன்ற தேர்தலில் நின்றவர்கள். மேலும் இவர்களில் 99 சதவீதம் பேர் சுயேட்சை வேட்பாளர்கள்.
உபியில் தேர்தலில் நிற்க தடைவிதிக்கப்பட்டவர்களில் 7 பேர் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டவர்கள். இந்த எண்ணிக்கை பீகாரில் 15 ஆக இருக்கிறது.
அதேபோல் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு வேட்பாளர்களின் செலவுகளை கண்காணிக்குமாறு வருமான வரித்துறையினருக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்த வேலைகளுக்கு என சில வருமானத்துறை அதிகாரிகளை கொண்ட நிபுணர் குழு ஒன்றை நியமித்துள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications