நடத்தை விதி மீறலைக் கண்காணிக்க 155 குழுக்கள்
சென்னை: சென்னை தொகுதிகளில் தேர்தல் நடத்தை விதிகள் மீறலை கண்காணித்து நடவடிக்கை எடுக்க 155 சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
சென்னையில் தேர்தல் நடத்தை விதிகள் அனைத்து வட்டங்களிலும் அமலாக்கப்படுவதைக் கண்காணிக்க 155 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என்று மாநகராட்சி ஆணையர் ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.
சென்னை மாநகராட்சி ஆணையர் ராஜேஷ் லக்கானி இத்தகவலைத் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் அவர் இதுகுறித்துப் பேசுகையில், சென்னையின் அனைத்துப் பகுதிகளிலும் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்பேரில் தேர்தல் நடத்தை விதிகளை முழுமையாக அமல்படுத்த தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
சென்னையில் உள்ள 155 வட்டங்களிலும் தேர்தல் நடத்தை விதிகள் முறையாக அமல்படுத்தப்படுவதைக் கண்காணிக்க மாநகராட்சியின் இளநிலைப் பொறியாளர்கள் தலைமையில் தலா ஒரு சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
அந்தந்த வட்டங்களில் டிஜிட்டல் பேனர்கள் நிறுவுதல், விளம்பரம் செய்வது ஆகியவற்றில் தேர்தல் நடத்தை விதி மீறல் இருந்தால் இக் குழுக்கள் கண்காணித்து தகவல் அளிக்கும். இதன்பேரில், உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
தற்போது சென்னையில் வாக்காளர் சரிபார்க்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஜனவரி மாத இறுதி நிலவரப்படி, மொத்த வாக்காளர்கள் 31 லட்சத்து 22 ஆயிரத்து 96.
இதில் 1 லட்சத்து 20 ஆயிரம் வாக்காளர்களுக்கு புகைப்பட அடையாள அட்டைகள் வழங்கப்படவில்லை. கடந்த 3 நாள்களில் மட்டும் 25 ஆயிரம் கூடுதல் வாக்காளர்களுக்கு புகைப்பட அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.
விண்ணப்பம் செய்வோரில் தகுதியுள்ள வாக்காளர்கள் அனைவருக்கும் புகைப்பட அடையாள அட்டைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அரசு கட்டடங்களில் தேர்தல் பிரசார விளம்பரங்கள் செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அனுமதி பெறாமல் தனியார் கட்டடங்களிலும் சுவர் விளம்பரங்களைச் செய்யக் கூடாது. இதை மீறுவோர் மீது புகார் தெரிவித்தால், நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார் லக்கானி.
-
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications