கார் கவிழ்ந்து விபத்து - கவிஞர் தமிழச்சி படுகாயம்
வேலூர்: வேலூரில் நடந்த கார் விபத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசுவின் தங்கையும், திமுக பேச்சாளருமான கவிஞர் தமிழச்சி தங்கப்பாண்டியன் படுகாயமடைந்தார். மேலும் இருவரும் காயமடைந்தனர்.
தமிழச்சி தங்கப்பாண்டியன் நேற்று சேலத்திலிருந்து சென்னைக்கு காரில் வந்து கொண்டிருந்தார்.
பிற்பகல் 12.30 மணியளவில் அவர் வந்த கார் வேலூர், வள்ளலார் தேசிய நெடுஞ்சாலையில் வந்தபோது, திடீரென தாறுமாறாக ஓடியது. பின்னர் சாலைத் தடுப்புக் கம்பிகளை மோதி உடைத்து அடுத்த சாலையில் போய் தலைகுப்புற கவிழ்ந்தது.
இதில் கார் டிரைவருக்கு பலத்த அடிபட்டது. அவரது உடலில் கார் கண்ணாடியின் உடைந்த பாகங்கள் பாய்ந்தன. தமிழச்சியும், அவரது பாதுகாவலரும் காருக்குள் சிக்கிக் கொண்டனர்.
விபத்து நடந்ததைக் கேள்விப்பட்டு போலீஸார் விரைந்து வந்தனர். காருக்குள் சிக்கியிருந்த தமிழச்சியையும், பாதுகாவலரையும் மீட்டு வெளியே கொண்டு வந்தனர். படுகாயமடைந்த நிலையில் 3 பேரும் சி.எம்.சி. மருத்துவமனைக்ககு கொண்டு வரப்பட்டனர்.
3 பேரும் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர். டிரைவருக்கு இன்னும் மயக்கம் தெளியவில்லை என்று கூறப்படுகிறது.
தமிழச்சி தங்கப்பாண்டியனுக்கு முதுகு மற்றும் நெஞ்சுப் பகுதியில் அடிபட்டிருக்கலாம் எனத் தெரிகிறது. அங்கு வலி இருப்பதாக அவர் கூறியதைத் தொடர்ந்து அவருக்கு எக்ஸ்ரே எடுத்துப் பார்க்கப்பட்டுள்ளது.
விபத்து குறித்து அறிந்ததும் வேலூர் மாவட்ட திமுக செயலாளர் காந்தி மருத்துவமனைக்கு விரைந்து வந்து பார்த்தார்.
-
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications