புலிகள் இயக்கத்தில் வலுக்கட்டாயமாக சேர்க்கப்பட்ட ஐ.நா. ஊழியர்
கொழும்பு: ஐநாவில் பணியாற்றி வந்த ஊழியர் ஒருவர் விடுதலைப் புலிகள் கட்டாயப்படுத்தி தங்களது இயக்கத்தில் சேர்த்துக் கொண்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இது குறித்து ஐ.நா. மனித உரிமைப் பிரிவின் கொழும்பு ஒருங்கிணைப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கடந்த வாரத்தில் எங்களது ஊழியர் ஒருவரையும் அவரது குடும்பத்தினர் மூவரையும் வலுக்கட்டாயமாக விடுதலைப் புலிகள் இயக்கத்தில் தங்கள் இயக்கத்தில் சேர்த்துள்ளனர். இதில் 16 வயது சிறுமியும் அடங்குவார். இவர் எங்களது ஊழியரின் மகளாவார்.
இதனால் ஊழியர் மற்றும் அவரது குடும்பத்தினரின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகியுள்ளது.
பாதுகாப்பு வளையப் பகுதியில் வைத்து அவர்களை புலிகள் இழுத்துச் சென்றுள்ளனர். சிறார்களை ஆயுதப் போராட்டத்தில் ஈடுபடுத்துவது சர்வதேச குற்றம். இதனால் இவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என புலிகளிடம் கோரியுள்ளோம்.
முன்னதாக இரு வாரங்களுக்கு முன் இன்னொரு ஊழியரையும் புலிகள் தங்கள் இயக்கத்தி்ல் வலுக்கட்டாயமாக சேர்த்தனர். அவரும் விடுவிக்கப்படவில்லை என்று கூறப்பட்டு்ள்ளது.
இலங்கை செய்து வருவது போர்க் குற்றமே-ஐ.நா:
இதற்கிடையே இலங்கையின் வட பகுதியில் இலங்கை அரசும், படைகளும் செய்து வருவது போர்க் குற்றமே என்று மீண்டும் உறுதிபடத் தெரிவித்துள்ளார் ஐ.நா. மனித உரிமை ஆணையத் தலைவர் கலாநிதி நவநீதம் பிள்ளை.
ஏற்கனவே இதுதொடர்பாக நவநீதம் பிள்ளை தெரிவித்த கருத்துக்களுக்கு இலங்கை அரசு மறுப்பு தெரிவித்திருந்தது. விடுதலைப் புலிகளின் இணையதளத்தைப் பார்த்து அதன் அடிப்படையில் பேசியுள்ளார் பிள்ளை என கூறியிருந்தது இலங்கை அரசு.
ஆனால் தான் கூறியது சரிதான் என்றும், இலங்கை அரசு செய்து வருவது போர்க் குற்றமே என்று மீண்டும் உறுதிபடத் தெரிவித்துள்ளார் பிள்ளை.
இது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணைக்குழு அலுவலகத்தின் பேச்சாளர் ராபெர்ட் கொல்விலி கூறுகையில்,
இலங்கை அரசாங்கம் தனது எதிர்ப்பை தெரிவித்துள்ள போதும் இலங்கையின் வடபகுதியில் ஏற்பட்டுள்ள நிலமை தொடர்பாக நாம் வெளியிட்ட அறிக்கை சரியானதே.
இலங்கை அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட கொல்லப்பட்ட பொதுமக்கள் தொடர்பான தகவல்களை பலதரப்பு தகவல்களுடன் ஒப்பிட்ட பின்னரே அறிக்கை வெளியிடப்பட்டது.
எனவே கடந்த வெள்ளிக்கிழமை எமது அலுவலகம் வெளியிட்ட தகவல் சரியானது என்றார் அவர்.
1500 தமிழர்கள் தப்பி ஓட்டம்:
இந் நிலையில் வன்னியில் போர் நடந்து வரும் பகுதிகளிலிருந்து 1500 தமிழர்கள் தப்பி ஓடியுள்ளனர்.
போர் நடந்து வரும் பகுதிகளிலிருந்து 1500 தமிழர்கள் தப்பி ராணுவ வீரர்களிடம் புகலிடம் கேட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. கடந்த மூன்று மாதங்களில் மட்டும் இதுவரை 39 ஆயிரம் பேர் அரசுப் பகுதிகளுக்கு வந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்து.
மேலும், நேற்று விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் நான்கு அப்பாவிகள் கொல்லப்பட்டதாகவும், 13 பேர் காயமடைந்ததாகவும், ராணுவம் கூறியுள்ளது.
இதற்கிடையே, அப்பாவிகளைக் குறி வைத்து ராணுவம் தொடர்ந்து பீரங்கித் தாக்குதலை நடத்தி வருவதாக புலிகள் கூறியுள்ளனர். தமிழர்கள் தங்களது பகுதிகளில் விரும்பியேதான் இருக்கின்றனர் என்றும், ராணுவத் தாக்குதலுக்குப் பயந்து இடம் பெயர மறுப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
-
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து?












Click it and Unblock the Notifications