ஆதரவாளர்கள் 'ஜகா'-ஆள் பிடிக்கும் கண்ணப்பன்!
கோவை: மதிமுகவிலிருந்து வேகமாக விலகி, திமுகவில் சேரப் போவதாக அறிவித்து விட்ட கண்ணப்பன், தனது ஆதரவாளர்கள் பெரும்பாலானோர், திமுகவில் சேர மறுத்து விட்டதால் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளார். இதையடுத்து தனது குடும்பத்தோடு ஆதரவாளர்களை வீடு தேடிச் சென்று பல்வேறு உறுதிமொழிகளைக் கூறி திமுகவில் சேர்ந்து விடுமாறு கெஞ்சி வருகிறாராம்.
மதிமுக அவைத் தலைவராக இருந்த கண்ணப்பன் சமீபத்தில் கட்சியிலிருந்தும், எம்எல்ஏ. பதவியிலிருந்தும் ராஜினாமா செய்தார்.
சூட்டோடு சூடாக அவரை அமைச்சர் ஸ்டாலின் பொள்ளாச்சி அருகே உள்ள கண்ணப்பனின் பண்ணை வீட்டுக்குச் சென்று சந்தித்து திமுகவில் இணைய அழைப்பு விடுத்தார்.
அதை ஏற்ற கண்ணப்பன், வருகிற 23ம் தேதி முதல்வர் கருணாநிதி முன்னிலையில் மீண்டும் திமுகவில் இணைகிறார்.
தன்னுடன் ஏராளமான பேர் இணையப் போவதாகவும் அவர் கூறியிருந்தார். ஆனால் அப்படி இணையப் போவதாக கூறிய பலரும் இப்போது முடியாது என்று மறுத்து விட்டனராம். இதனால் கண்ணப்பன் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
ஆலாம்பாளையம் பண்ணை வீட்டில் வைத்து தனது ஆதரவாளர்கள், மதிமுக முக்கியப் பிரமுகர்களுடன் கண்ணப்பன் ஆலோசனை நடத்தியபோது அத்தனை பேரும் திமுகவில் இணைந்து விடலாம் என்றுதான் கூறியிரந்தனர்.
ஆனால் தற்போது அவர்களில் பலரும் திமுகவில் இணைய மறுத்து வருகின்றனராம்.
இதனால் கண்ணப்பன் தனது ஆதரவாளர்களின் வீட்டுக்கு நேரடியாக சென்று பேசி திமுகவில் இணையுமாறு கேட்டு வருகிறாராம். அவர் மட்டுமன்றி, கண்ணப்பனின் மனைவி, மகள், மகன், மருமகன் உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் அனைவரும் ஆதரவு திரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
திமுகவில் இருந்து மதிமுகவில் சேர்ந்தபோது 17 ஒன்றிய செயலாளர்களுடன் வந்தார். அதில் பாதி பேரையாவது திருப்பி அழைத்துச் செல்ல வேண்டும் என்ற முனைப்போடு உள்ளார். ஒன்றிய செயலாளர்களுக்கு பல்வேறு உத்தரவாதங்களும் தரப்படுகின்றன.
கண்ணப்பன் சென்னை சென்று திமுகவில் சேரும் நிகழ்ச்சிக்காக ஆட்களைத் திரட்டும் வேலையில் கோவை மாவட்ட திமுகவினரும் இறங்கியுள்ளனர். 200க்கும் மேற்பட்ட வாகனங்களை திமுகவினர் ஏற்பாடு செய்துள்ளனராம்.
இதற்கிடையே போட்டி மதிமுக நடத்தி வந்த எல்.கணேசனும் செஞ்சி ராமச்சந்திரனும் இன்று திமுகவில் இணைகின்றனர். இவர்கள் ரொம்ப கஷ்டப்பட்டு தான் ஆள் பிடித்துக் கொண்டு திமுகவுக்குத் திரும்புகின்றனர்.
-
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications