காங்கிரசுக்கு எதிராக எஸ்எம்எஸ் பிரச்சாரம்!
சென்னை: தமிழகத்தில் காங்கிரஸ் போட்டியிடும் அனைத்துத் தொகுதிகளிலும் அந்தக் கட்சிக்கு எதிராக தீவிரப் பிரச்சாரம் மேற்கொள்ள இளந்தமிழர் இயக்கம் முடிவெடுத்துள்ளது.
இது குறித்து அதன் மாநில ஒருங்கிணைப்பாளர் அருணபாரதி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஞாயிறுக்கிழமை சென்னையில் இளந்தமிழர் இயக்கத்தின் நிர்வாகக் குழுக் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கோ.ராஜாராம் தலைமை தாங்கினார்.
தமிழீழ மக்களின் துயரை விளக்கும் தமிழீழ ஆதரவு பரப்புரைப் பயணத்திற்கும், "காங்கிரசுக்கு வாக்களிக்க மாட்டேன்" என்று 1 இலட்சம் கையெழுத்துகள் பெறும் கையெழுத்து இயக்கத்திற்கும், சேலம் இன எழுச்சி மாநாட்டிற்கும் உதவிகள் செய்தவர்கள், நன்கொடை வழங்கியவர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்து இதில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஈழத் தமிழர்களைக் கொல்வதற்காக இலங்கை அரசுக்கு ஆய்த உதவிகள் செய்த காங்கிரஸ் கட்சி போட்டியிடும் தமிழகத்தின் அனைத்துத் தொகுதிகளிலும் தீவிரப் பிரச்சாரம் மேற்கொள்ளப்படும் என்றும் அதற்காக குறுஞ்செய்தி தகவல் மையம் (SMS service) அமைக்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்தக் குறுஞ்செய்தி தகவல் மையத்தில் சந்தாதாரர்கள் ஆக ரூ.100 கட்டணம் செலுத்த வேண்டும். கட்டியவர்களின் கைபேசி எண்ணுக்கு காங்கிரசுக்கு எதிரான தகவல்கள், காந்தி, அம்பேத்கர் போன்ற தலைவர்கள் காங்கரசைப் பற்றிக் குறிப்பிட்ட வரலாற்றுத் தகவல்கள், ஈழத்தமிழர் ஆதரவு போராட்டச் செய்திகள், ஈழப் போர் குறித்த இணையதள செய்திகள் என பல செய்திகளும் உடனுக்குடன் அனுப்பி வைக்கப்படும்.
இதில் திரட்டப்படும் நிதி பிரச்சாரத்திற்காக பயன்படுத்தப்படும். இதில் இணைய விரும்பும் தமிழ் உணர்வாளர்கள், 9841949462 மற்றும் 9894310997 ஆகிய எண்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பித் தொடர்பு கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
-
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications