சுருளி மலையில் நக்சல்கள் நடமாட்டம்!

Subscribe to Oneindia Tamil

தேனி: தேனி மாவட்டம் சுருளி மலை வனப்பகுதியில் நக்சலைட்டுகள் நடமாட்டம் குறித்து வந்த ரகசிய தகவலையடுத்து அதிரடிப்படையினர் அங்கு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

தேனி மாவட்டம் சுருளி மலை வனப்பகுதியில் இரண்டு தினங்களுக்கு முன்பு மாடு மேய்க்க சென்ற ராஜேந்திரன் என்பவர் சீருடையுடன் சென்ற ஆண்கள் மற்றும் பெண்கள் உள்பட 8 பேரை பார்த்துள்ளார்.

இது குறித்து அவர் போலீசாருக்கு ரகசிய தகவல் கொடுத்தார். இந்த தகவலை அடுத்து க்யூ பிரிவு போலீசார் தேனி மலைப்பகுதிகளில் உள்ள மக்களிடம் தீவிர விசாரணை நடத்தினர்.

அப்போது நகசல்கள் நடமாட்டம் குறித்து முக்கிய பல தகவல்கள் கிடைத்ததுள்ளதாம்.

இந்த நிலையில் பழனி ஆயுதப்படை முகாமிலிருந்து அதிரடிப்படையினர் சுருளி மலைப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+