2600 பேரை ஏமாற்றி ரூ. 1 கோடி மோசடி!
சென்னை: கோவையைச் சேர்ந்த ஒரு நிறுவனம் எம்.எல்.எம். பாணியில் 2600 பேரிடம் சுமார் ரூ. 1 கோடி வரை மோசடி செய்துள்ளது. இந்த நிறுவனத்தை நடத்தி வந்த ஐந்து பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
மல்ட்டி லெவல் மார்க்கெட்டிங் எனப்படும் எம்.எல்.எம். முறை மூலம் பல பகுதிகளிலும் மோசடிச் சம்பங்கள் நடந்து வருகின்றன. இதுகுறித்து காவல்துறை எத்தனையோ முறை எச்சரித்தும் கூட தொடர்ந்து இதுபோன்ற மோசடிகள் நடந்து கொண்டுதான் உள்ளன.
கடந்தஆண்டு சென்னையில் தங்கக் காசு மோசடி உலுக்கியது. இந்த நிலையில் கோவையைச் சேர்ந்த ஒரு நிறுவனம் 2600 பேரிடம் ரூ. 1 கோடி வரை மோசடி செய்து விட்டு தலைமறைவாகியுள்ளது.
கோவையை தலைமை இடமாக கொண்டு இயங்கி வரும் நிறுவனம் அட்வான்ஸ்ட் பிசினஸ் சிஸ்டம். இதற்கு சென்னை ஈக்காட்டுத் தாங்கல்,ம துரை, திருச்சி, கோபிச்செட்டிப்பாளையம், ஈரோடு ஆகிய இடங்களில் கிளைகள் உள்ளன.
இந் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக துரைராஜ் என்பவரும், துணை நிர்வாகிகளாக மணிகண்டன், சிக்கந்தர் பாஷா, திருமூர்த்தி, சிவப்பிரகாசம் ஆகியோர் செயல்பட்டுள்ளனர்.
இவர்களது மோசடித் தனம் என்னவென்றால் ..
உடனே வேலை வேண்டுமா, எங்களிடம் வாருங்கள் என இவர்கள் விளம்பரம் தருவார்கள். அதை நம்பி வருவோரிடம் தங்களது திட்டத்தை விவரிப்பார்கள்.
ரூ. 4000 கட்டி முதலில் எங்களது திட்டத்தில் சேருங்கள். நீங்கள் மற்றவர்களையும் இதில் சேர்த்து விடலாம். அப்படிச் சேர்த்து விட்டால் ஒருவருக்கு ரூ. 900 கமிஷனாக தருகிறோம் என்பார்கள்.
இந்த டீலிங் நன்றாக இருக்கிறதே என்று நம்பி 2600 பேர் பணம் கட்டி சேர்ந்துள்ளனர். கிட்டத்தட்ட ரூ. 1 கோடி வரை இப்படி மோசடியாக வசூலித்து விட்ட துரைராஜ் கும்பல் அப்படியே கம்பி நீட்டி விட்டது.
கமிஷன் பணம் வராததால் அதிர்ச்சி அடைந்த ஏமாந்தவர்கள் சென்னை புறநகர் காவல் துறை ஆணையர் ஜாங்கிட்டிடம் புகார் கொடுத்தனர்.
மின்னல் வேகத்தி்ல் நடவடிக்கையில் இறங்கிய போலீஸார் துரைராஜையும் மற்றவர்களையும் வளைத்துப் பிடித்தனர். அவர்களிடமிருந்து செல்போன்கள், கம்ப்யூட்டர், ஆவணங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.
-
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை?












Click it and Unblock the Notifications