சிதம்பரத்துடன் சிஐஏ தலைவர் சந்திப்பு
டெல்லி: அமெரிக்க புலனாய்வு அமைப்பான சிஐஏவின் தலைவர் லியோன் பனேடா இன்று டெல்லி வந்தார். அங்கு அவர் மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரத்தை சந்தித்து பேசினார்.
மும்பை பயங்கரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பாக இந்திய அரசுக்கு உதவும் வகையில் சிஐஏ விசராணை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் சிஐஏ தலைவர் லியோன் பனேடா இன்று டெல்லி வந்தார். உள்துறை அமைச்சர் சிதம்பரத்துடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இவர்களது பேச்சுவார்த்தை குறித்து அரசு அதிகாரி ஒருவர் கூறுகையில்,
ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் பகுதியில் மும்பை தாக்குதல் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் இந்தியா தொடர்பானவற்றை தங்களுக்கு அளிக்குமாறு சிதம்பரம் கேட்டுகொண்டார். அதேபோல் சிஐஏ தலைவரும் இந்தியாவுக்கு தெரிந்த அமெரிக்கா தொடர்பான விஷயங்களை கேட்டுள்ளார். அவர்கள் இருவரும் தீவிரவாதம் மற்றும் பாகிஸ்தானின் நிலையற்ற அரசியல் குறித்து பேசினர்.
தீவிரவாதத்துக்கு எதிரான போரில் இரு நாடுகளும் இன்னும் நெருங்கி வருவது என முடிவெடுக்கப்பட்டது.
இதை தொடர்ந்து சிஐஏ தலைவர் பனேடா, ஐபி தலைவர் ராஜீவ் மாதுர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம் கே நாராயணன், ரா அமைப்பு தலைவர் கே.சி.வர்மா ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
பனேடாவுடன் இந்தியாவுக்கான அமெரிக்காவின் இடைக்கால தூதர் பீட்டர் பர்லேவும் வந்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications