ஜார்க்கண்டில் லாலுவுக்கு 2 சீட் ஒதுக்கி காங் பதிலடி
டெல்லி: பீகாரில் தங்களுக்கு 3 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கி லாலுவின் ராஷ்டீரிய ஜனதா தள கட்சிக்கு காங்கிரஸ் ஜார்க்கண்டில் 2 தொகுதிகள் ஒதுக்கி பதிலடி கொடுத்துள்ளது.
சமீபத்தில் பீகாரில் உள்ள 40 நாடாளுமன்ற இடங்களுக்கான தொகுதி பங்கீட்டை ராஷ்டீரிய ஜனதா தள தலைவர் லாலு அறிவித்தார். அதில் தங்கள் கட்சி 25, பஸ்வான் கட்சி 12 மற்றும் காங்கிரஸ் 3 தொகுதிகளில் போட்டியிடும் என அறிவித்தார். தேசிய கட்சியான தங்களுக்கு 3 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டது காங்கிரசுக்கு பெரும் அதிர்ச்சியாக அமைத்தது.
இதையடுத்து காங்கிரஸ் கட்சி ஜார்க்கண்ட் மூலம் லாலுவுக்கு பதிலடி கொடுக்க திட்டமிட்டது. இதையடுத்து இங்கு சிபு சோரனின் ஜார்க்கண்ட் முக்திமோர்ச்சாவுடன் கூட்டணி உடன்பாட்டை முடிவு செய்துள்ளது. இங்கு லாலுவும் இவர்கள் கூட்டணியில் இருந்த போதும் அவரிடம் கலந்து ஆலோசிக்கவில்லை.
ஜார்க்கண்ட்டில் மொத்தமுள்ள 14 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 7, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா 5 இடங்களிலும் போட்டியிடும் என்றும், எஞ்சிய 2 தொகுதிகள் லாலு பிரசாத் கட்சிக்கு கொடுக்கப்பட்டுள்ளதாக பீகார் மாநில் காங்கிரஸ் கட்சி தலைவர் கேசவ் ராவ் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்பு நடந்த பேச்சுவார்த்தையில் காங்கிரசுக்கு 6, லாலு கட்சிக்கு 3 என பேசப்பட்டிருந்தது. ஆனால் தற்போது காங்கிரஸ் தங்களுக்கு ஒன்றை அதிகரித்து, லாலுவுக்கு ஒன்றை குறைத்துள்ளது. ஆனால், இந்த தொகுதி உடன்பாட்டை லாலு ஏற்றுக்கொள்வாரா என்பது தெரியவில்லை.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications