மபி: 12 பேர் எரித்துக் கொலை-கொள்ளையர் வெறி
போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 12 பேரை கொள்ளையர் கும்பல் ஒன்று உயிரோடு எரித்து கொலை செய்துள்ளது.
மபி தலைநகர் போபாலில் இருந்து சுமார் 490 கிமீ., தூரத்தில் வடகிழக்கே சத்னா மாவட்டம் உள்ளது. உபி எல்லைக்கு அருகில் இருக்கும் இந்த பகுதியில் கொள்ளையர்கள் அதிகம் இருக்கின்றனர்.
இந்நிலையில் சத்னா மாவட்டத்தில் உள்ள பசிகியா என்ற கிராமத்தில் பீடா சிங் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். நேற்று நள்ளிரவு கிராமத்துக்குள் புகுந்த கொள்ள கும்பல் அவரது குடும்பத்தினரை 12 பேரை வீட்டுக்குள் போட்டு பூட்டி தீ வைத்தது. இதில் அனைவரும் பலியானார்கள்.
இது குறித்து மாவட்ட் போலீஸ் அதிகாரி சுக்பீர் சிங் கூறுகையில், வீட்டுக்குள் வைத்து தீ வைக்கப்பட்டவர்களில் 11 பேர் சம்பவ இடத்திலே பலியாகிவிட்டனர். ஒருவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் இறந்தார். அவர்களில் மூன்று குழந்தைகளும், நான்கு பெண்களும் அடங்குவார்கள். இன்று காலை இறந்தவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டது என்றார் அவர்.












Click it and Unblock the Notifications