குன்னூரில் ராணுவ வீரர் குடிபோதையில் ரகளை
குன்னூர்: குன்னூர் வண்டிப்பேட்டை மார்க்கெட் பகுதியில் நேற்று இரவு சுமார் 7.20 மணி அளவில் ஒருவர் நன்றாக குடித்துவிட்டு தள்ளாடி கொண்டிருந்தார்.
அந்த வழியாக வருவோர்கள் மீது கற்களை வீசி எறிந்து ரகளை செய்தார். அருகிலிருந்த கடைக்கு சென்று தொலைபேசியில் பேச வேண்டும் என கூறி அதை கீழே போட்டு உடைத்துள்ளார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் போலீசுக்கு தகவல தெரிவித்தனர்.
போதையில் சுயநினைவு மங்கிய நிலையில் என்ன செய்கிறோம் என்பதை அறியாமல் அங்கே நின்று கொண்டிருந்த சிறுவர்களை துப்பாக்கியால் சுட்டு விடுவதாக மிரட்டியுள்ளார். இதையடுத்து ஆத்திரமடைந்த பொதுமக்களில் சிலர் அவரை தாக்க முயன்றுள்ளனர்.
இந்நிலையில் அங்கு போலீசார் பொது மக்களை தடுத்து நிறுத்தி, சமாதானப்படுத்தினர். பின்னர் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். ஆரம்பத்தில் விசாரணைக்கு ஒத்துழைக்காத அவர் போலீசாரை தாக்க முயன்றுள்ளார். அப்போது அவர் தான் இந்திய ராணுவ கப்பல் அதிகாரி என்றும், தான் வெலிங்டன் பேரக்ஸ் பகுதியில் வசித்து வருவதாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து போலீசார் ராணுவ முகாமுக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் அவர் ராணுவ வாகனத்தில் அழைத்து செல்லப்ப்டடார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications