ரம்பத்தால் கழுத்தை அறுத்து பெண் கொலை
கோவை: திருப்பூர் அருகே பெண்ணை அவளது கள்ளக் காதலன் ரம்பத்தால் கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் அருகே உள்ள வேலம்பட்டிபுதூரை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மனைவி ஈஸ்வரி (37). இவர்களுக்கு கார்த்திகேயன் (18), சந்தோஷ்குமார் (16), பவித்ரா (14) என மூன்று குழந்தைகள் உள்ளனர்.
இவர்களது வீட்டுக்கு பக்கத்தில் திருமணம் முடிந்த சில ஆண்டுகளிலே மனைவியை இழந்த அழகிரி என்ற எலக்ட்ரிசியன் வசித்து வருகிறார். ஈஸ்வரிக்கும் இருவருக்கும் இடையே கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே கள்ளத் தொடர்பு உள்ளது.
சில ஆண்டுகளுக்கு முன் ஈஸ்வரி தனது குழந்தைகளை அழைத்து கொண்டு கள்ளக் காதலன் வீட்டிலே நிரந்தரமாக தங்கிவிட்டார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் ஈஸ்வரியின் கணவர் சுப்பிரமணி இறந்து போக இவர்கள் எந்த பிரச்சினையும் இல்லாமல் சேலம் சென்று சந்தோஷமாக குடித்தனம் நடத்தி வந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களாக இவர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் காலப்போக்கில் சண்டையாக மாறியது. இதையடுத்து தனது மகன்கள், மகளுடன் பொங்கலூர் வேலம்பட்டி புதூரில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு ஈஸ்வரி வந்து விட்டார். பின்னர் ஈஸ்வரி கூலி வேலைக்கு சென்று தனது குடும்பத்தை காப்பாற்றி வந்தார்.
ஈஸ்வரி இருக்கும் இடத்தை அறிந்து கொண்ட அழகிரி வேலம்பட்டி புதூருக்கு வந்தார். அப்போது வேலைக்கு சென்று கொண்டிருந்த ஈஸ்வரியை தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு அழைத்தார். ஆனால், ஈஸ்வரி மறுத்துவி்ட்டார். இதையடுத்து அழகிரி தான் வைத்திருந்த ரம்பத்தால் ஈஸ்வரியை வெட்டினார். தப்பி ஓட முயன்ற ஈஸ்வரியை விரட்டி பிடித்து ரம்பத்தால் கழுத்தை அறுத்து கொன்றார்.
இதையடுத்து பல்லடம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். கொலையாளி அழகிரியை கைது செய்தனர்.
-
தவெக அருண்ராஜ் படத்துடன்.. வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய இருந்த சில்வர் பாத்திரங்கள் பறிமுதல்! -
என்னது துணை முதலமைச்சர் பதவி தராங்களா.. விஜய் தான் முதலமைச்சர்.. செங்கோட்டையன் தடாலடி -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
கொட்டிய ஆலங்கட்டி மழை.. கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் ஐஸ் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி! -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
விஜய் ஏமாத்திட்டாரு.. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. திமுகவில் இணையும் செங்கோட்டையன்? -
Annamalai: 80 சீட்+ துணை முதல்வர் பதவி? பாஜக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? அண்ணாமலை கொடுத்த விளக்கம் -
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி!












Click it and Unblock the Notifications