பீகாரில் லாலு - காங் கூட்டணி உடைந்தது - 37 தொகுதிகளில் காங். போட்டி

பீகார் மாநிலத்தில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் வெறும் 3 சீட்களை மட்டுமே காங்கிரஸுக்கு ஒதுக்கினார் லாலு பிரசாத் யாதவ்.
இதனால் கடுப்பான காங்கிரஸ் தற்போது அதிரடியாக அங்கு 37 தொகுதிகளில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளது.
இதுகுறித்து பீகார் மாநில காங்கிரஸ் வேட்பாளர் தேர்வுக் குழு தலைவர் சுஷில் குமார் ஷிண்டே கூறுகையில், 37 சீட்களில் போட்டியிட காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. அங்கு கூட்டணி தர்மம் மீறப்பட்டுள்ளது. இதனால் நாங்கள் அதிர்ச்சி அடைந்துள்ளோம்.
இப்போது எங்களுக்கு லாலுவுடன் கூட்டணி இல்லை என்றார் ஷிண்டே.
லாலு மச்சான் காங்கிரஸில் ..
இதற்கிடையே முன்னாள் ஆர்.ஜே.டி தலைவரும், லாலு பிரசாத் யாதவின் மைத்துனருமான சாது யாதவ் என்கிற அனிருத் பிரசாத் யாதவ், காங்கிரஸில் இணைந்துள்ளார்.
டெல்லி வந்த அவர் சோனியா காந்தியை சந்தித்து காங்கிரஸில் இணைவதை அறிவித்தார்.
லாலுவின் மனைவி ராப்ரியின் சகோதரர்தான் இந்த சாது யாதவ். இவர் தற்போது கோபால்கஞ்ச் தொகுதி எம்.பியாக உள்ளார். அவருடன் பனகா எம்.பி. கிரிதரி யாதவ், முன்னாள் அமைச்சர் ராமாய் ராம் ஆகியோரும் காங்கிரஸில் இணைந்துள்ளனர்.
பாஸ்வானிடம் லாலு சரணடைந்து விட்டார் என்று கூறி ராஷ்டிரிய ஜனதாதளத்திலிருந்து விலகியுள்ளார் சாது யாதவ்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications