சமத்துவ மக்கள் கட்சி கொள்கை பரப்புச் செயலாளர் நீக்கம்
மதுரை: கட்சிக் கட்டுப்பாட்டை மீறியதாக அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் மருது அழகுராஜ் அக் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளராக இருப்பவர் மருது அழகுராஜ்.
ஆரம்ப கால கட்டத்தில், தேமுதிக -வில் கலை இலக்கிய அணி மாநில துணைச் செயலாளராக பதவி வகித்த மருது அழகுராஜ் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதாக பதவி நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து அவர் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியில் இணைத்தார்.
இதனையடுத்து, சமத்துவ மக்கள் கட்சியில் மருது அழகுராஜிக்கு கொள்கை பரப்புச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது.
சமீபத்தில் நடைபெற்ற ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் மருது அழகுராஜ் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டு நடந்து கொண்டதாக கட்சி தலைவர் சரத்குமாருக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த புகார் குறித்து அ.இ.ம.க. தலைவர் சரத்குமார் விசாரணை நடத்தினார். விசாரணையில் மருதுஅழகுராஜ் கட்சி கட்டுப்பாட்டை மீறியது உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து கட்சித் தலைவர் சரத்குமார் உத்தரவின் பேரில் பொதுச் செயலாளர் கரு. நாகராஜன் அனைத்து மாநில நிர்வாகிகளுக்கும், மாவட்டச் செயலாளர்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
அதில், கட்சி வளர்ச்சிப் பணியில் முறையாக செயல்படாததால் கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளராக பதவி வகித்த மருது அழகுராஜ் கட்சியின் பதவியிலிருந்தும் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் 20-3-2009 முதல் விடுவிக்கப்படுகிறார் என்று அறிவித்துள்ளார்.
-
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications