நானோ: ஏப் 9முதல் வெறும் ரூ.2999 செலுத்தி முன்பதிவு செய்யலாம்!

இன்று நானோ அறிமுகப்படுத்தப்பட்டாலும் வரும் ஏப்ரல் 9-ம் தேதியிலிருந்துதான் முன்பதிவு செய்யப்படும் என ரத்தன் டாடா அறிவித்துள்ளார். தொடர்ந்து 15 நாட்கள் இந்த முன்பதிவு நடக்கும்.
மூன்று மாடல்களில் வெளிவரவிருக்கும் நானோவின் ஆரம்ப விலை ரூ.1 லட்சமாகவும், வரிகள், காப்பீடு என எல்லாம் சேர்த்து ரூ.1.2 முதல் 1.3 லட்சமாகவும் இந்தக் கார் விலை இருக்கும் என்றார்.
முதல் 1 லட்சம் கார்கள் இதே விலையில் விற்கப்படும் என்றும், காரின் விலை உயர்வு குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் 850 நகரங்களில் உள்ள பாரத ஸ்டேட் வங்கிகளின் கிளைகள் உள்பட 30000 மையங்களில் நானோ முன்பதிவு விண்ணப்பங்கள் கிடைக்கும் என்றும், வெறும் ரூ.2999 செலுத்தி இந்தக் காரை முன்பதிவு செய்யலாம் என்றும் ரத்தன் டாடா கூறியுள்ளார்.
முன்பதிவு செய்யப்படும் கார்கள் வரும் ஜூலை 1-ம்தேதி முதல் டெலிவரி செய்யப்படும். விண்ணப்பதாரர்களில் முதல் 1 லட்சம் பேருக்கு குலுக்கள் முறையில் இந்தக் கார்கள் டெலிவரி தரப்படும்.
கார்கள் ஒதுக்கப்படாத விண்ணப்பதாரர்களின் பணத்துக்கு 8.5 சதவிகித வட்டி கணக்கிடப்பட்டு, கார்கள் ஒதுக்கீடு செய்யப்படும்போது அவர்கள் தொகையில் சேர்க்கப்படும் என்றார் ரத்தன் டாடா.
மேலும் இந்தக் கார்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் பணி இரண்டரை ஆண்டுகளுக்குப் பின்பே துவங்கும் என்றார்.
உலகிலேயே மிகவும் குறைந்த விலை கொண்ட பிராண்டட் கார் டாடாவின் நானோதான்.
ஒரு மோட்டார் சைக்கிளின் விலையை விட (புல்லட் விலை ரூ.1லட்சத்துக்கும் மேல்) குறைந்த விலையில் விற்பனைக்கு வந்துள்ள இந்தக் காரை முன்பதிவு கூட்டம் பெருமளவு அலைமோதும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த மாதம் முதல்வாரம் மட்டுமே இந்தக் கார்கள் அனைத்து டாடா மோட்டார்ஸ் ஷோரூம்களிலும் விற்பனைக்கு வைக்கப்பட உள்ளன.
எப்படியிருந்தாலும், இன்று நானோ முன்பதிவு துவங்கும்போது, பங்குச் சந்தை சூடுபிடிக்கும் என நம்புகிறார்கள்
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications