ஒரு மாதத்திற்குப் பின்னர் பணிக்குத் திரும்பினர் வக்கீல்கள்
சென்னை: கிட்டத்தட்ட ஒரு மாத காலமாக ஸ்டிரைக்கில் ஈடுபட்டிருந்த வக்கீல்கள் இன்று முதல் பணிக்குத் திரும்பினர்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் வக்கீல்களுக்கும், போலீஸாருக்கும் இடையே ஏற்பட்ட பெரும் மோதலைத் தொடர்ந்து காலவரையற்ற கோர்ட் புறக்கணிப்பில் வக்கீல்கள் ஈடுபட்டிருந்தனர். இதனால் தமிழகம் முழுவதும் நீதிமன்றப் பணிகள் பெரும் பாதிப்பை சந்தித்தன. பொதுமக்கள் பெரும் பாதிப்புக்குள்ளானார்கள்.
இந்த நிலையில் சமீபத்தில், சென்னை கூடுதல் ஆணையர் விஸ்வநாதன், இணை ஆணையர் ராமசுப்ரமணி ஆகியோரை சென்னை உயர்நீதிமன்றம் சஸ்பெண்ட் செய்ய உத்தரவிட்டது.
இதை வக்கீல்கள் வரவேற்றனர். மேலும், தற்காலிகமாக தங்களது போராட்டத்தை கைவிடுவதாகவும், திங்கள்கிழமை முதல் பணிக்குத் திரும்புவதாகவும் அறிவித்தனர்.
அதன்படி இன்று காலை வக்கீல்கள் பணிக்குத் திரும்பினர். சென்னை உயர்நீதிமன்றம், மதுரை கிளை மற்றும் பிற நீதிமன்றங்களில் இன்று காலை வக்கீல்கள் பணிக்குத் திரும்பியதைத் தொடர்ந்து இயல்பு நிலை திரும்பியது.
சட்டக் கல்லூரிகளும் திறப்பு:
அதேபோல கடந்த 50 நாட்களுக்கும் மேலாக மூடப்பட்டிருந்த தமிழக சட்டக் கல்லூரிகள் அனைத்தும் இன்று திறக்கப்பட்டன.
இதனால் மாணவர்கள் மகிழ்ச்சியுடன் வகுப்புகளுக்குச் சென்றனர். இலங்கைப் பிரச்சினை தொடர்பாக மாணவர்கள் பலவகையான போராட்டங்களில் ஈடுபட்டதைத் தொடர்ந்து சட்டக் கல்லூரிகள் மூடப்பட்டன.
50 நாட்களாக வகுப்புகள் நடைபெறாததால், மே மாதம் நடைபெற வேண்டிய தேர்வுகள் ஒரு மாதம் தள்ளி வைக்கப்பட்டு ஜூன் மாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
சென்னை மெட்ரோ தலைகீழாக மாறப்போகிறது.. ஷாப்பிங் + கொண்டாட்டம்.. ஒரே இடத்தில்! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
பெரம்பூர் ரயில் நிலையத்தில் சூட்கேஸில் தலையில்லாத சடலம்! மனைவி, ஆண் நண்பரை தட்டி தூக்கிய தனிப்படை -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
2031 வரை அண்ணாமலை காத்திருக்க மாட்டார்.. அவரின் உண்மையான திட்டம் இதுதான்.. வெளியான தகவல்! -
கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் என்ன பறக்குது.. போலீசாரை வெகுவாக பாராட்டிய பொதுமக்கள் -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்!












Click it and Unblock the Notifications