மன்மோகன் சிங்கே பிரதமர் வேட்பாளர்-சோனியா

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை இன்று டெல்லியில் சோனியா காந்தி வெளியிட்டார்.
அவருடன் பிரதமர் மன்மோகன் சிங், வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி ஆகியோரும் கலந்து கொண்டனர்.
பின்னர் சோனியா காந்தி பேசுகையில், மக்களின் பாதுகாப்பு, மரியாதை, வளர்ச்சி ஆகியவையே காங்கிரஸ் கட்சியின் இலக்கு என்றார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், நாட்டின் அடுத்த பிரதமராக மீ்ண்டும் மன்மோகன் சிங்கே பதவியேற்பார். இந்தப் பதவிக்கு பலரும் போட்டி போடலாம். ஆனால் பொருத்தமானவர் டாக்டர் மன்மோகன் சிங் மட்டுமே.
மன்மோகன் சிங்குக்கு முன்பு யாரும் நிற்கக் கூட முடியாது. அனுபவம், திறமை இரண்டும் ஒருங்கிணைந்தவர் மன்மோகன் சிங் மட்டுமே.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் கடந்த ஐந்து ஆண்டு கால சாதனைகளை மனதில் கொண்டு மக்கள் காங்கிரஸுக்கு வாக்களிப்பார்கள்.
பிரதமர் பதவிக்கு வர வேண்டும் என்ற எண்ணம் எனக்கு அறவே இல்லை. இதுகுறித்த எனது நிலைப்பாடு அப்படியேதான் இருக்கிறது.
நலிவடைந்த சமூகத்தினர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் சிறுபான்மையினர் நலனுக்காக காங்கிரஸ் கட்சி பாடுபடும்.
நாடு முழுவதும் பலமாக வேரூண்றியுள்ள ஒரே கட்சி காங்கிரஸ் மட்டுமே என்றார் சோனியா காந்தி.
இதுகுறித்து நிருபர்கள் கேள்வி கேட்டபோது, எனது நிலைப்பாடு அப்படியேதான் இருக்கிறது. அதில் மாற்றம் ஏதும் வரப் போவதில்லை. காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளர் மன்மோகன் சிங் மட்டுமே. இதற்கு மேல் என்ன எதிர்பார்க்கிறீர்கள் என்றார் சோனியா.
-
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications