திமுகவின் உதயசூரியன் சின்னத்திற்கு தடை இல்லை!

சென்னையைச் சேர்ந்த இளைஞர் இந்து சங்கம் என்ற அமைப்பு இதுதொர்பாக உச்சநீதிமன்றத்தில் பொது நலன் மனுவைத் தாக்கல் செய்திருந்தது.
அதில், திமுகவுக்கு தேர்தல் சின்னமாக உதயசூரியன் சின்னம் உள்ளது. இப்படி சின்னமாக உதயசூரியனை ஒதுக்கியது சட்டவிரோதமாகும்.
உதயசூரியன் சின்னம் மத அடையாளத்தைக் குறிப்பதாகும். எனவே இந்த சின்னத்தை திமுகவுக்கு ஒதுக்கியது மக்கள் பிரதிநிதிகள் சட்டத்தின் விதிகளுக்குப் புறம்பானதாகும். எனவே இந்த சின்னத்தை திமுக பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.
மனுதாரர் சார்பில் வக்கீல் வி.கே.பிஜூ ஆஜரானார். மனுவை விசாரித்த தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையிலான பெஞ்ச் இந்த வாதத்தை ஏற்க மறுத்து விட்டது.
இதுகுறித்து நீதிபதிகள் கூறுகையில், 1952ம் ஆண்டு திமுகவுக்கு சின்னம் ஒதுக்கப்பட்டது. அதுகுறித்து இப்போது மனுதாரர் கேள்வி கேட்பது ஏன் என்று புரியவில்லை.
இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட ஒவ்வொரு சின்னமும் ஏதாவது ஒரு வகையில் மதத்துடன் தொடர்புடையாதாகவே உள்ளது.
இந்தியாவில் பசு, ஆடு உள்ளிட்டவை மதத்துடன் தொடர்புடையதாகவே உள்ளன. எனவே உதயசூரியனை தடை செய்ய வேண்டும் என்று கோர முடியாது என்றனர்.
இதையடுத்து தனது மனுவை வாபஸ் பெறுவதாக வக்கீல் பிஜூ தெரிவித்தார். அதற்கு நீதிபதிகள் அனுமதி அளித்து வழக்கை பைசல் செய்து விட்டனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு












Click it and Unblock the Notifications